இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரீசார்ஜ் மற்றும் இ-காமர்ஸ் தளமாக விளங்கி வரும் பேடிஎம் தற்பொழுது ஆர்பிஐ அனுமதியுடன் பேடிஎம் பேமெண்ட் வங்கி இன்று தொடங்கியுள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கி

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற பேடிஎம் நிறுவனத்தின் புதிய பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட துவங்கியுள்ளதால் தங்களது பேடிஎம் வாலட் வாடிக்கையாளர்களை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உறுப்பினர்களாக இணைத்துள்ளது.

 • குறைந்தபட்ச இருப்புதொகை பூஜ்யம் என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.
 • முதற்கட்டமாக வங்கி கணக்குளை தொடக்க அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
 • அழைப்பிதழை பெற  paytmpaymentsbank.com அல்லது ஆப் வாயிலாக இன்விட்டேஷன் லிங்கை தேர்ந்தெடுத்து லாகின் செய்வதன் வாயிலாக கணக்கை தொடங்க அழைப்பிதழ் வழங்கப்படும்.
 • இதில் கணக்கை தொடங்க ஆதார் அட்டை அவசியமாகும்.
 • ஆண்டுக்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • முதல் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 பணத்திற்கு வைப்பு தொகையாக அல்லது பரிவர்த்தனை பேமெண்ட் வங்கி வழியாக மேற்கொண்டால் ஒவ்வொரு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகபட்சமாக ரூபாய் 250 வரை கேஸ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 4 முறை மட்டுமே வழங்கப்படும்.

 • NEFT, RTGS, IMPS போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட் வங்கியில் பயன்படுத்தும் பொழுது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
 • காசோலை, டெபிட் கார்டு, பாஸ்புக் போன்றவை வழங்கப்படும், இதற்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கப்படாது ஆனால் டெபிட் கார்டு போன்றவை பெறும் பொழுது ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் பாஸ்புக் மற்றும் காசோலை போன்வற்றுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
 • பேடிஎம் பேமெண்ட் வங்கியில் ரூபே டெபிட்கார்டு வழங்கப்படும். இந்த பேமென்ட் வங்கியல் கடம் பெற இயலாது.
 • முதல் வருடத்தில் நாடு முழுவதும் 31 வங்கிகள் மற்றும் 3000 வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
 • Paytm Payments Bank (PPB) ஏடிஎம் கார்டு வழியாக பணம் பெறும் பொழுது முதல் மூன்று முறை இலவசமாகவும் அதன் பிறகு ரூ. 30 மெட்ரோ நகரங்களிலும் ரூ. 20 மற்ற தகரங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் பொழுதும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இது போன்ற பேமெண்ட் வங்கி சேவையை ஏர்டெல் வழங்கி வருகின்றது.இதுதவிர ஜியோ, ஐடியா வோடபோன் போன்ற நிறுவனங்களும் வழங்க உள்ளது.