ஜூலை 1ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிற்கு முன்பாக பேடிஎம் ப்ரீ-ஜிஎஸ்டி என்ற பெயிரில் சிறப்பு விலை சலுகையை அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி : பேடிஎம் வழங்கும் ப்ரீ-ஜிஎஸ்டி விற்பனை சலுகை விபரம்..!

பேடிஎம் வழங்கும் ப்ரீ-ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் மால் வாயிலாக ஜிஎஸ்டி வருகைக்கு முன்னதாக இருப்பில் உள்ள பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் நாளை முதல் வரும் வியாழன் வரை (ஜூன்13-15 வரை) சிறப்பு கேஸ்பேக் சலுகைகள் வழங்க உள்ளது.

எல்ஜி , சோனி , சாம்சங் நிறுவனங்களின் டிவி, லெனோவா, டெல், ஆப்பிள் நிறுவனங்களின் லேப்டாப், கேமரா. போன்றவற்றுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரை கேஸ்பேக் சலுகைகளை வழங்குகின்றது.

ஓப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 வரை கேஸ்பேக் கிடைக்கும்.

ரூ.1000 விலைக்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலருக்கு ஐபோன் சிறப்பு இலவச பரிசாக வழங்கப்பட உள்ளது.

இது தவிர ஆடைகள்,ஆக்செரிஸ்கள் என அனைத்திற்கும் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து மேலும் விபரங்களை அறிய பேடிஎம் ஆப் மற்றும் தளத்தை பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here