இந்தியாவின் பிரசத்தி பெற்ற மின்னணு பண பறிமாற்ற பேடிஎம் நிறுவனம் புதிதாக வாட்ஸ்அப் சேவைக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பேடிஎம் இன்பாக்ஸ் சேவையை தொடங்கியுள்ளது.

பேடிஎம் இன்பாக்ஸ்

வாட்ஸ்அப் செயலி பெற்றுள்ள பல்வேறு வசதிகளை அடிப்படையாக அம்சமாக கொண்ட புதிதாக வாட்ஸ்அப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் இன்பாக்ஸ் சேவையை 23 கோடி வாடிக்கையாளர்களுக்கும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியில் படங்கள்,வீடியோ,நேரலை இருப்பிடம், தொடர்புகள் ஆகியவற்றுடன் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மறையாக்கம் எனப்படுகின்ற என்கிரிப்டேட் வசதி கொண்டதாக, தனிநபர் உரையாடல்கள், க்ரூப் சாட்ஸ், போன்ற சேவைகளுடன் வந்துள்ளது.

இதுதவிர பேடிஎம் இன்பாக்சில் அறிவிக்கைகள், டிராக் செய்யும் வசதி, ஆர்டர்கள் மற்றும் கேம்ஸ்கள் ஆகியவற்றை பெறலாம்.முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள இந்த சேவை ஆப்பிள் பயனாளர்களுக்கு விரைவில் கிடைக்க உள்ளது.