கடந்த மே மாதம் தொடங்கி பல்வேறு விதமான ரேன்சம்வேர் தாக்குதல் சர்வதேச அளவில் பல நாடுகளில் நிகழ்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில் புதிதாக Petya எனும் பெயரில் ரேன்சம்வேர் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெட்யா ரேன்சம்வேர்
ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான ரேன்சம்வேர் தாக்குதலாக பெட்யா (Petya) என்ற பெயரில் நிக்ழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தாக்குதலில் உக்ரைன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரேன்சம்வேர் என்றால் என்ன ?
ரேன்சம்வேர் என்பது கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் என்கிரிப்ட் செய்து லாக் செய்யும் வகையிலான மால்வேர் ஆகும். லாக் செய்த பின்னர் பணம் கேட்டு உங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
சமீபத்தில் 150க்கு மேற்பட்ட நாடுகளில் 3 லட்சம் கனிணிகளை பாதித்த வானா கிரை போன்றே இந்த ரேன்சம்வேரும் $ 300 அளவிலான பிட்காயின் வேண்டும் என மிரட்டிப் பணம் பறிக்கும் தாக்குதலையே மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டின் வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்றவற்றின் மீது கடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தவிர உணவு நிறுவனம் மான்டெல்ஸ், சரக்குகளை விநியோகம் செய்ய, கண்டெய்னர் சேவை மேர்ஸ்க் , விளம்பர நிறுவனம் WPP , ரஷ்யா ஆயில் நிறுவனம் ஒன்று போன்றவை மிக கடுமையாக இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது.
வானா கிரை போன்றே மிக வேகமாக பரவி வரும் இந்த இணைய வழி தாக்குதலை சமாளிக்க மிக விரைவான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
உங்களுக்கு இந்த ஆபத்து ஏற்படுவதனை அறிய ட்வீட்டர் பக்கத்தில் ஹேக்கர் ஃபென்டாஸ்டிக் எனும் கணக்கில் இந்த ஆபத்தை தடுக்க வழிமுறை வழங்கப்பட்டுள்ளது, அதாவது உங்கள் கனிணி தாக்குதலுக்கு உள்ளாகின்றது என்றால் தானாகவே ரீபூட் ஆகும்போது கீழே வழங்கப்பட்டுள்ள படத்தை போன்ற திரை தோன்றினால் உடனடியாக கனிணியை அனைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
If machine reboots and you see this message, power off immediately! This is the encryption process. If you do not power on, files are fine. pic.twitter.com/IqwzWdlrX6
— Hacker Fantastic (@hackerfantastic) June 27, 2017