உலக புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 5 ஆம் பாகம் மே 25ந் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தை வாணாக்கரை ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Wannacry தாக்குதல்

வால்ட் டிஸ்னி தாயரித்துள்ள ஜானி டேப் நடித்துள்ள பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 5: டெட் மேன் டெல் நோ டேல்ஸ் படத்தை வானாக்கிரை ரான்சம்வேர் தாக்கி கோடிகனக்கான டால்களை பணம்கேட்டு மிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணத்தை செலுத்த தவறினால் ஆன்லைனில் படம் வெளியாகும், என எச்சரித்து வருகின்ற வானாக்கிரை ரான்சம் முதற்கட்டமாக 5 நிமிட படக்காட்சிகளை வெளியிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால் இது குறித்தான எந்த அதிகார்வப்பூர்வ கருத்தையும் வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவிக்கவில்லை. 150 நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ள இந்த ரான்சம் வேர் தாக்குதலுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தப்பவில்லை. இதுவரை இந்த வைரஸ் உலகளவில் ரூ.44.80 லட்சம் வரை பெற்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here