அமெரிக்காவின் பொலராய்ட் நிறுவனம் இந்தியாவில் பொலராய்ட் எல்இடி டிவி மற்றும் மானிட்டர் என மொத்தம் 6 மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அமேசான் தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

பொலராய்ட் எல்இடி டிவி

அமெரிக்காவைச் சேர்ந்த பொலராய்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை இந்தியாவின் பவர்ஃபுல் டெக்னாலாஜிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

முதற்கட்டமாக அமேசான் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ள போலராய்டு  மாடல்களில் 3 எல்இடி டிவிகள் மற்றும் 3 எல்இடி மானிட்டர்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ரூ.7999 முதல் ரூ.13,999 வரையிலான விலையில் எல்இடி டிவியும் ,ரூ.3,499 முதல் 4,599 வரையிலான விலையில் மூன்று மானிட்டர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் மாடல்களை விற்பனை செய்வதற்கான இந்தியா உரிமை மட்டுமல்லாமல் பூடான் மற்றும் நேபால் போன்ற நாடுகளுக்கும் பவர்ஃபுல் டெக்னாலாஜிஸ் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் போலாராய்டு நிறுவனத்தின் சன்கிளாஸ்,கேமரா, பிரின்டர்கள் மற்றும் ஹெட்போன் போன்றவை விற்பனை செயப்பட்டு வருகின்றது.