pubg lite

பிரபலமான பப்ஜி (PUBG) விளையாட்டினை குறைந்த திறன் கொண்ட கணினி லேப்டாப்களுக்கு என பப்ஜி லைட் என்ற பெயரில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியிட உள்ளதை உறுதி செய்துள்ளது.

தனது அதிகார்வப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பிளேயர்அன்னவுன்ஸ் பேட்டில்கிரவுண்ட் (PlayerUnknown’s Battlegrounds) வெளியிட்ட டீசரில் இந்தியாவிற்கு இந்த லைட் வெர்ஷனை வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பப்ஜி லைட் தேவை என்ன ?

குறைந்த தேவைகளில் சிறப்பாக விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட உள்ள பப்ஜி லைட் ஆனது குறைந்த பட்ச கணினி அல்லது லேப்டாப் ஆதரவு திறன் பின் வருமாறு :- விண்டோஸ் 7, 8 or 10 64-bit ஓஎஸ், இன்டெல் கோர் i3 CPU at 2.4GHz ஸ்பீடு, 4GB RAM, இன்டெல் HD 4000 கிராபிக்ஸ் மற்றும் 4GB டிஸ்க் ஸ்பேஸ் கொண்டிருக்க வேண்டும்.

சிறப்பான முறையில் பப்ஜி லைட்டினை விளையாட விண்டோஸ் 7, 8 or 10 64-bit OS, இன்டெல் கோர் i5 CPU at 2.8GHz, 8GB RAM, Nvidia GTX 660 or AMD Radeon HD 7870 கிராபிக்ஸ் மற்றும் 4GB of disk ஸ்பேஸ் பெற்றிருக்க வேண்டும்.

அறிமுகம் செய்யப்பட வேண்டிய தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தியா, தாய்வான், பங்களாதேஷ், பிரேசில் போன்ற நாடுகளில் வெளியாக உள்ளது.