மீண்டும் வரும் பப்ஜி மொபைல் இந்தியா வீடியோ கேம் எதிர்பார்ப்புகள்

இந்தியாவில் மீண்டும் பப்ஜி மொபைல் வீடியோ கேமை அறிமுகம் செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை பப்ஜி கார்ப்பரேஷன் மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச அளவில் உள்ள போர் விளையாட்டிற்கும் இந்திய சந்தைக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய வீரர்களுக்கு ஏற்ப “பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விளையாட்டு சூழலை” வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அதாவது சில அம்சங்கள் உலகளாவிய பதிப்பிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இந்த பகுதியில், PUBG மொபைல் இந்தியா உலகளாவிய பதிப்பிலிருந்து எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

போர் விளையாட்டுக்கு புதிய லோகோ மற்றும் மோனிகர் இருக்கும் – ‘PUBG Mobile India’ என பெயரிடப்பட்டு  உலகளாவிய பதிப்பிலிருந்து தனித்தனியாக விளங்கும். மேலும் வீரர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையும், பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயனர்களின் தரவு பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யவும். இந்திய பயனர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை வைத்திருக்கும் சேமிப்பக அமைப்புகளில் வழக்கமான தணிக்கைகள் மற்றும் சரிபார்ப்புகள் இருக்கும் ”என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

PUBG மொபைல் இந்தியா பதிப்பில் அனைத்து கதாபாத்திரங்களும் முழுமையாக உடையணிந்து, சிவப்பு நிறத்திற்கு பதிலாக இரத்தம் பச்சை நிறமாக காட்சிப்படுத்தப்பட்டு, விளையாட்டில் குறைந்த அளிவல் ரத்தக்களரியைக் காண்பிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

தங்கள் பழைய ஐடிகள் மற்றும் சாதனைகளுடன் மீண்டும் தொடங்க முடியும் என்று பப்ஜி உறுதியளித்துள்ளது. இருப்பினும், தடைசெய்யப்பட்ட பயனர்களுக்கு இது பொருந்தாது.

பப்ஜி அறிமுகம் எப்போது ?

பப்ஜி மொபைல் இந்தியாவில் வெளியிடப்பட உள்ள தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய அதிகாரிகள் புதிய மொபைல் கேமின் உள்ளடக்கம், கொள்கைகள் போன்றவற்றை இதுவரை ஆராயவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எப்போது அறிமுகம் என்ற கேள்வி தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.

web title : PUBG mobile India gets different version