192 எம்பி கேமரா வரை ஆதரிக்கும் குவால்காம் சிப்புகள்

192 மெகாபிக்சல் வரை கேமரா திறனை ஆதரிக்கும் சிப்செட்களாக குவாலக்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855, ஸ்னாப்டிராகன் 845, ஸ்னாப்டிராகன் 675, மற்றும் ஸ்னாப்டிராகன் 670 போன்ற சிப்செட்டுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  48 எம்பி கேமரா ஆதரவை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் பெற்றுள்ளது.

ஒரே கேமராவில் அதிகபட்சமாக 192 மெகா பிக்சல் ரெஸ்ல்யுஷன் வரை வழங்க வல்ல திறன் பெற்ற சிப்புகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு மூலம் மிகுந்த உயர் தரத்தில் கேமரா புகைப்படங்களை பெற இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் தரத்திலான படங்களை பெறுவதுடன், ஸ்லோ மோஷன் படங்களின் திறனை மொபைலில் அதிகரிக்கவும், ஹைபிரிட் ஆட்டோ ஃபோகஸ் , Multi-Frame Noise Reduction (MFNR), மற்றும் ஜீரோ ஷட்ட் லேக் (Zero Shutter Lag -ZSL) உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது.

தற்போது சர்வதேச அளவில் 48 எம்பி கேமரா போன்களை அறிமுகம் செய்து வரும் சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்களின் மாடலாகளான ரெட்மி நோட் 7 ப்ரோ, ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள், மேலும் நோக்கியா நிறுவனம் பென்டா லென்ஸ் என 5 கேமராக்களை நோக்கியா 9 ப்யூர் வியூ மாடல் பெற்றதாக வந்துள்ளது. இனி வரும் காலங்களில் 48 மெகாபிக்சல் என்பதனை கடந்த அடுத்த இலக்கை நோக்கி மொபைல் நிறுவனங்கள் நகர தொடங்க உள்ளன.