குவால்காம் நிறுவனத்தின் முந்தைய க்விக் சார்ஜ் 4 நுட்பத்தை விட கூடுதலாக சிறப்புஅம்சங்களை பெற்ற குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் ஸ்மார்ட்போன் நூபியா Z17 ஆகும்.

குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் புதிய அம்சங்கள் ?

குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ்

இன்றைய நவீன ஸ்மார்ட்போன்களின் அடிப்படை அம்சமாக மாறி வருகின்ற ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை சிப்செட் தயாரிக்கும் குவால்காம் நிறுவனத்தின் முந்தைய சார்ஜிங் நுட்பமான க்விக் சார்ஜ் 4.0 விட கூடுதலாக வேகத்தையும் செயல்திறனையும் பெற்றதாக க்விக் சார்ஜ் 4.0+ வந்துள்ளது.

முந்தைய நுட்பத்தை விட 15 சதவிகித கூடுதலான வேகத்தில் சார்ஜிங் செய்யும் திறனை கொண்டுள்ளது.மேலும் முந்தைய 4.0 வெர்ஷனை விட 30 சதவிகித கூடுதல் செயல்திறனை பெற்றதாகும்.முக்கிய அம்சமாக 3 சதவிகித வரை குளிர்ச்சி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய அம்சங்களை க்விக் சார்ஜ் 4.0 பிளஸ் பெற்றுள்ளது அதன் விபரம் பின் வருமாறு :-

குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் புதிய அம்சங்கள் ?

இதில் டூயல் சார்ஜிங் நுட்ப மேம்பாடு, அறிவுதிறனுடன் செயல்படும் வகையிலான வெப்ப பராமரிப்பு மற்றும் உயர்தர பாதுகாப்பு அம்சத்தையும் பெற்றுள்ளது.

  • இருவகையான வழிகளில் சார்ஜிங் செய்யப்படும் பொழுது மொபைலின் சிப்செட்கள் வெப்பத்தை குறைத்து விரைவாக சார்ஜ் வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அடுத்து வெப்பத்தை சிறப்பாக பராமரிக்கும் வகையில் குளிர்ச்சியான பகுதிகளை கண்டறிந்து செயல்படுவதுடன் வெப்பமான ஸ்பாட்களில் சார்ஜிங் செய்யப்படுவதனை கட்டுப்படுத்துகின்றது.
  • உயர்தர பாதுகாப்பு அம்சம் என்படும் நுட்பத்தில் கேஸ்கள் மற்றும் கனெக்டர் போன்றவற்றின் வாயிலாக வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையிலான மற்றும் சீராக பராமரிக்க உதவும். அதிகப்படியான வெப்பத்தால் சார்சர்க்யூட் மற்றும் டைப் சி கனெக்டர் பாதிப்புகளை தடுக்க உதவும்.

குவால்காம் க்விக் சார்ஜ் 4 பிளஸ் பெற்ற முதல் மாடலாக ZTE நிறுவனத்தின் நூபியா பிராண்டின் நூபியா Z17 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here