qualcomm snapdragon 865

ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2019 அரங்கில் புதிய தலைமை சிப்செட்டாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 மற்றும் நடுத்தர மொபைல் போன்களுக்கான ஸ்னாப்டிராகன் 765 5G மொபைல் சிப்செட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் மாநாட்டில் 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரண்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான மேம்பாடுகளை பெற்ற சிப்செட் வெளியாகியுள்ளன. இந்த இரு சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

குவால்காம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்னாப்டிராகன் X55 5ஜி மோடம் RF சிஸ்டத்தை உள்ளடக்கிய ஸ்னாப்டிராகன் 865 மொபைல் சிப் உலகின் மிகவும் மேம்பட்ட 5ஜி சிப்செட் மாடலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 765/765G சிப்செட் 5ஜி இணைப்பு, மேம்பட்ட AI செயலாக்கம் மற்றும் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் அனுபவங்களை வழங்கும் வகையில் நடுத்தர ஸ்மார்ட்போனுக்கு ஏற்றதாக வரவுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் நேரடியாக 5ஜி இணைக்கப்படாமல் X55 மோடம் வாயிலாக 5ஜி சேவையை இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 5ஜி மொபைல்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக வழங்கப்பட உள்ளது.

 qualcomm-snapdragon-865

அடுத்த ஆண்டு வெளியாக உள்ள மொபைல் போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ் 11, ஒன்பிளஸ் 8, பிக்சல் 5, கேலக்ஸி நோட் 11, எல்ஜி ஜி 9 மற்றும் பல மொபைல்களில் இடம்பெற உள்ளது.