குவால்காம் Snapdragon 888 5G மொபைல் சிப்செட் சிறப்புகள்

அடுத்து வரவுள்ள பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனகளில் இடம்பெற உள்ள குவால்காம் Snapdragon 888 5G மொபைல் பிளாட்ஃபாரம் சிப்செட் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரியல்மி, சியோமி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் முன்னணி மொபைல் தயாரிப்பாளர்கள் இந்த சிப்செட் பெற்ற மாடல்களை கொண்டு வரவுள்ளன.

குவால்காம் Snapdragon 888 5G

வருடாந்திர தொழில்நுட்ப உச்சிமாநாட்டில், குவால்காம் டெக்னாலஜிஸ் முதன்மையான புதிய ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட்டை அறிவித்துள்ளது. முந்தைய 865 சிப்செட்டை தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 875 என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்னாப்டிராகன் 888 SoC என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிப்செட் 3 வது தலைமுறை ஸ்னாப்டிராகன் X 60 5G மோடம்-RF அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு உலகளாவிய SUB 6 5ஜி பேண்டில் செயல்படும் வகையிலும், மல்டி சிம், தனித்தன்மை, தனித்தன்மை இல்லாத மற்றும் டைனமிக் ஸ்பெக்ட்ரம் பகிர்வுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

6-வது தலைமுறை குவால்காம் AI இன்ஜின், மறு-வடிவமைக்கப்பட்ட குவால்காம் ஹெக்ஸ்கோன் பிராசெஸர் வினாடிக்கு 26 டெர்ரா செயல்பாடுகளை விநாடிகளுக்கு (TOPS- tera operations per second) வழங்குகின்றது.

2 வது தலைமுறை குவால்காம் சென்சிங் ஹப் உள்ளுணர்வு, புத்திசாலித்தனமான அம்சங்களுக்கான குறைந்த ஆற்றல் மூலம் எப்போதும் AI செயலாக்கத்தை ஒருங்கிணைக்கிறது.

888 சிப்செட்டில் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் 3-வது தலைமுறை குவால்காம் Adreno GPU  செயல்திறனில் குவால்காம் டெக்னாலஜிஸின் மிக முக்கியமான மேம்படுத்தலை வழங்குகிறது.

குவால்காம் ஸ்பெக்ட்ரா ஐஎஸ்பி வினாடிக்கு 2.7 ஜிகாபிக்சல்கள் அல்லது 12 எம்பி தீர்மானத்தில் சுமார் 120 புகைப்படங்களை இயக்குகிறது இது முந்தைய தலைமுறையை விட 35% வேகமாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC, சியோமி நிறுவனத்தில் வரவிருக்கும் Mi 11 முதல் மாடலாக சிப்செட்டைப் பயன்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியது. ஆசஸ், பிளாக் ஷார்க், லெனோவா, எல்ஜி, மீஜு, மோட்டோரோலா, நுபியா, ரியல்மி, ஒன்பிளஸ், ஓப்போ, ஷார்ப், விவோ மற்றும் இசட்இ ஆகியவை ஸ்னாப்டிராகன் 888 SoC உடன் மொபைலை அறிமுகப்படுத்த உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், காலக்கெடு இன்னும் வெளியிடப்படவில்லை.