உலகின் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதலாக கருதப்படுகின்ற இந்த புதிய ரான்சம் தாக்குதலில் 99 க்கு மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பலவேறு நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகின்றது.

ரான்சம் கம்ப்யூட்டர் வைரஸ்

இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஜெர்மனி ,இந்தியா,இத்தாலி என 100க்கு மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாக இந்த ரான்சம்வேர் அல்லது வானா க்ரை இணைய வழி கணினி தாக்குதல் பரவி வருகின்றது.

ரான்சம்வேர் என்றால் என்ன ?

ரான்சம்வேர் என்பது கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் லாக் செய்யும் வகையிலான மால்வேர் ஆகும்.

கணினிகளில் நுழைந்த சில விநாடிகளிலே ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகின்ற இந்த மால்வேர் அடுத்த,  ‘பிட்காயின்’ என்கிற டிஜிட்டல் கரன்சி வடிவத்தில் குறிப்பிட்ட $300 (ரூ.19200) அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு இயக்கமுடியும். இல்லையெனில், தகவல்கள் அழிக்கப்படும் (படத்தில் உள்ளதை போன்ற திரை தோன்றும்) என மிரட்டும் வகையிலான அறிவிப்பை 28 மொழிகளில் வெளிப்படுத்தி வருகின்றதாம்.

பாதிக்கப்பட்ட இடங்களின் வரைபடம்

ரான்சம் தாக்குதல்

முதற்கட்டமாக இங்கிலாந்தில் இந்த தாக்குதல் 40க்கு மேற்பட்ட மருத்துவமனையை குறிவைத்து நடத்தப்பட்டதாக அறியப்பட்ட நிலையில் மருத்துவமனைகள் அறுவை சிகச்சைகளை நிறுத்திவைத்தன,அதன் பின்னர் பரவலாக அறியப்பட்ட தகவலின் படி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவது உறுதியாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன், தாய்வான் போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன்,அதிகபட்சமாக 57,000 கணினிகள் தாக்குதலில் சிக்கியுள்ளதாக முன்னணி ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான அவாஸ் தெரிவிக்கின்றது.

உலக வரலாற்றில் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதல் என எஃப் செக்யூர் குறிப்பிடுகின்றது.

உலகின் முன்னணி கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமான ‘காஸ்பர்ஸ்கீ ரஷ்யாதான் இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என குறிப்பிடுகின்றது.

சமீபத்தில் ஒருவர் டோமைன் இணையத்தை பதிவு செய்யும்பொழுது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த ரான்சம் வைரஸ் தாக்குதல் முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்கியது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த தாக்குதல் பல்வேறு மருத்துவமனைகள் , நிறுவனங்கள், தனிநபர்களை அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா என்ஏஎஸ்ஏ

இந்த ரான்சம் வேர் தாக்குதலுக்கு அமெரிக்கப் பாதுகாப்பு துறையின் குளறுபடியே காரணம் என அமெரிக்க ஹேக்கரான எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். விண்டோஸ் இயங்குதள கணினிக்குள் புகுந்து உளவுப் பார்க்கும் மென்கருவிகளை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வைத்திருக்கிறது. அசட்டையாக இருந்ததால், அது எதிரிகளின் கைகளுக்கு போய், இப்படியான தாக்குதல் சாத்தியமாகியுள்ளது என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மிக பழைய விண்டோஸ் இயங்குதளங்கள் மற்றும் பழைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் வைத்திருப்பவர்கள் மிக ஜாக்கிரதையாக கையாளுவது மிக அவசியமாகும்.

இந்த தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையிலான மேம்பாட்டை ஆன்ட்டி வைரஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றது.

For more tamil tech news from GadgetsTamilan, like us on Facebook at facebook.com/gadgetstamilan and follow us on Twitter @gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here