ரிலையன்ஸ் ஜியோ தன் தனா தன் ரூ.399 கட்டணத்தில் சிறப்பு ஜியோ தீபாவளி தன் தனா தன் ஆஃபர் ரூ.399 வரை அதிகபட்சமாக கேஸ்பேக் பெறும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தீபாவளி தன் தனா தன் ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நிறுவனம் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று முதல் அதாவது 12ந் தேதி முதல் 18ந் தேதி வரையிலான கால கட்டத்தில் ரூ.399 தன் தனா தன் பிளான் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு  அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 என மொத்தம் 8 முறை ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது இந்த சிறப்பு கேஸ்பேக் சலுகையை நவம்பர் 15ந் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் பெறலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு திட்டம் 12 முதல் 18 வரையில் ஜியோ மணி,பேடிஎம், அமேஸான் பே  மொபிக்விக், போன் பீ மற்றும் ஜியோ ஸ்டோர்களில் ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.