JioNews: ஜியோநியூஸ் சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ

ஜியோநியூஸ் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியுள்ள புதிய சேவையின் முலம் jionews.com இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ் உட்பட 12 மொழிகளில் செய்திகளை படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் 2019, ஐபிஎல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 மற்றும் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற முக்கிய நிகழ்வுகள் என அனைத்து செய்திகளையும், நேரலையில் தொலைக்காட்சி சேவை மற்றும் வீடியோக்கள் ஒரே இடத்தில் பெற வழி வகுக்கின்றது.

ஜியோநியூஸ் சிறப்புகள் என்ன ?

ஜியோநியூஸ் சேவையின் மூலம் சுமார் தமிழ் உட்பட 12 க்கு மேற்பட்ட இந்திய மொழிகளில் விருப்பத்தேர்வுகள் வழங்குவதுடன் , 150+ நேரடி செய்திகள் வழங்கும் டிவி சேனல்கள், 800க்கு மேற்பட்ட இதழ்கள், 250க்கு மேற்பட்ட செய்தித்தாள்கள், பிரபல வலைப்பதிவுகள் மற்றும் செய்தி வலைத்தளங்கள் இந்தியா மற்றும் உலகயளவில் முன்னணி வகிக்கும் தளங்களை இங்கே பெறலாம்.

ஜியோ நியூஸ் முடிந்தவரை வேகமாக செய்தி உள்ளடக்கத்தை வழங்கும், இதன் மூலம் பயனர்கள் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, ஃபேஷன், வாழ்க்கை, சுகாதாரம், ஜோதிடம், நிதி மற்றும் மேலும் பல்வேறு செய்திகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (AI) மற்றும் மெஷின் லெர்னிங் (ML) முறையை கொண்டு முன்னணி வலைதளங்கள் மற்றும் செய்தியை சேகரித்து உடனுக்குடன் வழங்க உள்ளது.

ஜியோநியூஸ் ஆப்

150க்கு மேற்பட்ட முன்னணி டிவி சேனல்கள் வழங்குவதுடன் அவற்றின் மூலம் ஹாலிவுட் பாலிவுட், ஃபேஷன், உடல்நலம், வாகனத்துறை, தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் மேலும் பல பிரபலமான வீடியோக்கள் வழங்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

முன்பாக வழங்கப்பட்டு வந்த JioXpressNews, JioMags மற்றும் JioNewsPaper போன்ற சேவைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு JioNews என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாகும். தற்போது கூடுதலாக லைவ் டிவி மற்றும் வீடியோக்களின் கூடுதலாகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கு இன்று முதல் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஜியோநியூஸ் சேவை வெப், ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.