டிக்டாக் டவுன்லோட்

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையான ரிலையன்ஸ் ஜியோ, மிகவும் பிரசத்தி பெற்ற ஷாட் வீடியோ தளமான டிக்டாக் இந்தியா பிரிவை தனது கட்டுப்படாட்டில் கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தையை மேற்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்தில் இந்தியாவில் 59க்கு மேற்பட்ட சீன செயலிகள் தடை விதிக்கப்பட்ட போது சிக்கிய இந்திய சந்தையில் சுமார் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் சுமார் அமெரிக்கா டாலர் மதிப்பில் 3 பில்லியன் மதிப்பை கொண்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் தடை விதிக்கப்பட்ட டிக் டாக் மீண்டும் தனது சேவையை துவங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் முன்னணி டெக் தளமான டெக் கிரன்ஞ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மாத இறுதி முதல் பைட் டான்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் டிக்டாக் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா சேவையை மைக்ரோசாஃப்ட் கையகப்படுத்த பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளது.

source