ஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ

உலகின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பாடல்களை ஒளிபரப்பும் ஜியோ மியூசிக் உடன் சாவன் (Saavn) மியூசிக் நிறுவனத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

ஜியோ மியூசிக் உடன் இணையும் சாவன் மியூசிக்

ஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ

உலகின் முன்னணி இசை சார்ந்த ஒளிபரப்பு சேவைகளை வழங்கி வரும் சாவன் மியூசிக் , இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் முக்கிய பங்காற்றி வருகின்ற நிலையில், இந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் சேவையை வழங்கும் நிறுவனமாக உள்ள ஜியோ நிறுவனத்தின் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஜியோ மியூசிக் சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் இந்நிறுவனத்தை இணைப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இரு நிறுவனங்களின் இணைப்பின் மூலம் ஒட்டுமொத்த பிராண்டு மதிப்பு அமெரிக்கா டாலர் மதிப்பில் $1 பில்லியன் ஆக உயருகின்றது. இதில் ஜியோ மியூசிக் பிராண்டு $670 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் வாயிலாக ரிலையன்ஸ் நிறுவனம் $100 மில்லியன் வரை முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

சவான் நிறுவனத்தை தொடங்கியவர்களான ரிஷி மல்ஹோத்ரா, பரம்தீப் சிங் மற்றும் வினோத் பாத் ஆகிய மூவரும் தொடர்ந்து தங்களுடைய பணிகளை மேற்கொள்வதுடன் , வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றுவார்கள்.  இரு நிறுவனத்தின் இணைப்பு தொடர்பில், சவானின் தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து சுமார் 104 மில்லியன் டாலருக்கு பங்குகளை ரிலையன்ஸ் வாங்க உள்ளது. இந்த பங்குதாரர்கள் தங்கள் இருப்புப் பங்குகளை விற்பனை செய்கிறார்கள். டைவர் குளோபல் மேனேஜ்மென்ட், லிபர்ட்டி மீடியா மற்றும் பெர்டெல்ஸ்மன் ஆகியவற்றில் சவானில் முதலீடு செய்யப்பட்ட பங்குதாரர்கள் மற்றவர்கள் மத்தியில் உள்ளனர்.

ஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ

இந்த இணைப்பின் வாயிலாக சர்வதேச அளவிலான ஆடியோ ஸ்டிரீமிங் சேவையை விரிவுப்படுத்துவதற்கான பணிகளை ஜியோ துரிதப்படுத்தியுள்ளது. சாவன் நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றில் முன்னிலை வகிக்கின்றது.

ஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ