இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.1500 விலை மதிப்பிலான ஜியோபோன் விநியோகம் தீபாவளிக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 லட்சம் ஜியோபோன்
சமீபத்தில் ஜியோபோன் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக முன்பதிவு செய்த அனைவருக்கும் ஜியோபோன் வழங்கப்படும் என தனது அதிகார்வப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் ஜியோ உறுதி செய்துள்ளது.
ஜியோபோன் முன்பதிவு செய்தவர்கள்
நீங்கள் ஜியோ 4ஜி போனுக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தால் உங்கள் முன்பதிவு குறித்த விபரத்தை அறிய ஜியோஃபோன் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிலிருந்து 1800-890-8900 என்ற இலவச தொலை தொடர்பு எண்ணில் அழைத்து அதன் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும், மை ஜியோ ஆப் வாயிலாக My Vouchers டேபில் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜியோபோன் நுட்பவிபரம்
2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.
முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.
ஜியோபோன் முன்பணத்தை திரும்ப பெறும் வழிமுறை என்ன ?
ரூ.1500 கட்டணத்தை திரும்ப பெற ஜியோ போன் நிபந்தனைகள் பின்வருமாறு ;-
ஜியோ போன் திரும்பிக் கொடுக்கும் காலம் | ஜியோ போன் ஒப்படைக்கும் போது செலுத்த வேண்டிய தொகை |
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 12 மாதங்கள் வரை அல்லது 1 வருடத்திற்குள் | ரூ.1,500/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் செலுத்த வேண்டும். |
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை | ரூ.1,000/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் செலுத்த வேண்டும். (ரூ.500 திரும்ப கிடைக்கும்) |
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை | ரூ.500/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் செலுத்த வேண்டும். (ரூ.1000 திரும்ப கிடைக்கும்) |