ஆரம்பத்தில் முற்றிலும் இலவசம், பின்பு அதிக டேட்டா, தற்போது படிப்படியாக கட்டணத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உயர்த்த தொடங்கியுள்ளது. புதிய 84 நாட்கள் வேலிடிட்டி பெற்ற ஜியோ தன் தனா தன் பிளான் கட்டணம் ரூ.459 என வெளியிட்டுள்ளது.

புதிய ஜியோ டேட்டா பிளான்

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பல்வேறு வகையில் கட்டணத்தை குறைத்து ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை கவர்ந்த நிலையில், தற்போது தனது சுயரூபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

ஜியோ நிறுவனம் வரம்பற்ற அழைப்புகள் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், டேட்டா பிளானில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள நிலையில் வேலிடிட்டியை குறைத்துள்ளது. மேலும் இதுவரை தினசரி டேட்டா தீர்ந்த பிறகு 128 Kbps வேகம் என வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 64 Kbps ஆக வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜியோ 399 பிளானில் இதுவரை 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 70 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படும்.தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.

ஜியோ 459 பிளானில் இதுவரை 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.

ஜியோ 509 பிளானில் இதுவரை 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 70 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படும்.தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.

ஜியோ 999 பிளானில் இதுவரை வழங்கப்பட்ட 90 நாட்கள் வேலிடிட்டி தொடர்ந்து வழங்கப்பட்டாலும், டேட்டாவில் இதுவரை 90ஜிபி வழங்கப்பட்டிருந்த நிலையில் இனி 60ஜிபி டேட்டாவாக குறைக்கபட்டுள்ளது.

ஜியோ 1999 பிளானில் இதுவரை 120 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் டேட்டா 155ஜிபி -யிலிருந்து 125ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜியோ 4999 பிளானில் இதுவரை 210 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 360 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் டேட்டா 380 ஜிபி -யிலிருந்து 350 ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்த விலை டேட்டா பிளான்களான ரூ.149 திட்டத்தில் அதிரடி மாற்றமாக 4.2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி என அதிகரிக்கப்பட்டாலும்  தினசரி பயன்பாடு 150 எம்பி என குறைக்கப்பட்டுள்ளது.