ரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானதுஇந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி

ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர கட்டண முறையில் அறிவித்திருந்த ஜியோ பிரைம் திட்டத்தை கூடுதலாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக நீட்டித்துள்ள நிலையில், தனது ஆப் வரிசைகளில் பேட்டரி பராமரிப்பு சார்ந்த ஆப் தொடர்பான ட்விட்டர் டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது பீட்டா நிலையில் உள்ள இந்த செயலி குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுகள் மற்றும் ஜியோ ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் முழுமையாக இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனார்களுக்கு கிடைக்க உள்ளது.

ஜியோ 4ஜி நிறுவனம் ஜியோ 4ஜி வாய்ஸ்,  ஜியோ மியூசிக், ஜியோ டிவி, ஜியோ மணி, ஜியோ சாட், ஜியோ நியூஸ்பேப்பர்ஸ், ஜியோ மேக்ஸ்,  ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா போன்ற ஆப்களை வழங்கியுள்ளது.