இனி ரிலையன்ஸ் ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ அன்லிமிடேட் கால்கள்

கடந்த செப்டம்பர் 2016 4ஜி வோல்ட்இ சேவை வாயிலாக இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை மேற்கொண்ட ஜியோ நிறுவனம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் வழங்குவதாக அறிவித்திருந்தது.

தற்போது, இந்த திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் மட்டுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதாக டெலிகாம்டாக் இன்ஃபோ தளம் அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. வரம்பற்ற அழைப்புகள் என வழங்கப்படும் சேவைகளை தவறான வழியில் பலரும் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் இந்நிறுவனம் லிமிடேட் கால்களாக மாற்றியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலும் இந்த லிமிடேட் வாய்ஸ் கால் திட்டம் அனைத்து ஜியோ பயனாளர்களுக்கு பொருந்தாது என தெரிகின்றது. அதாவது ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வரம்பற்ற அழைப்புகளை துண்டித்துளள்ளதாக தெரிகின்றது.

பெரும்பாலான போட்டியாளர்கள், தங்களது பயனாளர்களுக்கு அதிகபட்சமாக வாரம் 1200 நிமிடங்கள் வரை மட்டுமே வழங்கி வந்த நிலையில் ஜியோ எந்த நிபந்தனையும் இல்லாமல் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வந்தது குறிப்பிடதக்கதாகும். மேலும் இந்த தகவல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தால் அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

எனவே, விரைவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இது தொடர்பான அறிக்கையை வெளியிடலாம் இணைந்திருங்கள்.