ரிலையன்ஸ் ஜியோ பிரவுசர் ஆப் வெளியானது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு என பிரத்தியேகமான ஜியோ பிரவுசர் ஆப் ஒன்றை பயனபாட்டுக்கு வெளியிட்டுள்ளது. மிக வேகமாக தமிழ் உட்பட எட்டு மொழிகளில் இந்தியாவின் முதல் பிரவுசர் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Reliance JioBrowser

கடந்த செப்டம்பர் 2016-யில் இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் 4ஜி நெட்வொர்க் வாயிலாக களமிறங்கிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ இன்ஃபோகாம் , இந்திய சந்தையில், தற்போது 26 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டு மூன்றாவது மிகப்பெரிய இந்திய டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ பிரவுசர் ஆப் வெளியானது

ஜியோ நிறுவனம் , தங்களுடைய பயனாளர்கள் பயன்பெறும் வகையில் ஜியோ சாவன் மியூசிக் , ஜியோ நியூஸ்பேபர்ஸ், ஜியோ சினிமா, ஜியோ 4ஜி வாய்ஸ், ஜியோ டிவி, ஜியோ கிளவுட், ஜியோ மனி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சாட் போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முதன்முறையாக இந்தியாவின் முதல் இணைய உலாவி என்ற பெருமையுடன் களமிறங்கியுள்ள ஜியோ பிரவுசர் மிக இலகுவாக மற்றும் வேகமாக இயங்கும் வகையில் லையிட் வெயிட் செயிலாக வடிவமைக்கப்பட்டு வெறும் 4.8 MB மட்டும் கொண்டுள்ளது.

இந்த பிரவுசரில் மிக எளிமையாக உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை படிக்க உதவுவதுடன்  தமிழ் உட்பட ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என எட்டு இந்திய மொழிகளில் இந்த உலாவி கிடைக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ பிரவுசர் ஆப் வெளியானது

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள ஜியோ பிரவுசரில் ஹிஸ்டரி , புக்மார்க்ஸ், பிரைவேர் பிரவுசிங் என பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. இந்த பிரவுசர் ஆப்பிள் பயனாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்பட வில்லை.