ஜியோக்ரூப்டாக் ஆப்

4ஜி நிறுவனமான ஜியோ நிறுவனம், புதிதாக கான்ஃபெரன்ஸ் காலிங் மேற்கொள்ளும் அம்சத்தை பெற்ற ஜியோக்ரூப்டாக் ஆப் ஒன்றை பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோ க்ரூப்டாக் செயலி மூலம் முதற்கட்டமாக ஆடியோ காலிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

ஜியோக்ரூப்டாக் செயலி

கான்ஃபெரன்ஸ் காலிங் முறையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஜியோக்ரூப்டாக் ஆப்பில் , ஜியோ பயனாளர்கள் மற்றும் ஜியோவை பயன்படுத்தாதவர்களுடன் பேச முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது கூடுதலாக மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும். எப்போது தனியாக
ஒருவரை  மியூட் செய்ய வேண்டும் என்றும் அல்லது க்ரூப் மியூட் (group mute) மேலும் அவர்களை திரும்ப இணைப்பது (reconnect caller) போன்றவற்றை கொண்டதாக வந்துள்ளது.

முதற்கட்டமாக ஜியோக்ரூப்டாக் செயலி வாயிலாக முதற்கட்டமாக ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு வீடியோ கால் மற்றும் க்ரூப் கால் செய்ய இயலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோவின் புதிய ஜியோக்ரூப்டாக் செயலி சிறப்புகளை அறிவோம்

இந்த செயலி மூலம் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 10 நபர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச இயலும், மேலும் ஜியோ க்ரூப்டாக் ஆப்பில் குறிப்பிடதக்க வசதியாக லெக்ச்சர் மோட் (Lecture Mode) வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட் மூலம் ஒருவர் பேச மற்றவர்கள் அதனை கேட்க இயலும். அதாவது ஆசிரியர் பாடம் நடத்துவது போல இந்த முறையில் மற்றவர்களின் ஆடியோ மியூட் கொண்டதாக செயல்படும்.

ஜியோ அல்லாத பயனாளர்களை இணைக்க VoLTE சேவை சப்போர்டில் இருக்க வேண்டும் மற்றும் இதனுடன் உங்களின் இன்டர்நெட் சேவை சிறப்பாக இருக்கவேண்டும். இந்த க்ரூப்டாக் செயலியில் அழைப்புகள் அனைத்தும் உயர்தர VoLTE தரத்தில் கிடைக்கும்.

ஜியோக்ரூப்டாக் செயலி முதற்கட்டமாக கூகுள் பிளை ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. இதனை டவுன்லோட் செய்து தங்களுடைய ஜியோ எண் மூலம் உள்நுழையலாம்.