jio

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்ற பெயரில் மும்பை, தானே மற்றும் கல்யாண போன்ற பகுதிகளில் தனது சேவையை துவங்கியுள்ளது.

ஜியோ சந்தாதாரர்களுக்கு “ஆரம்ப தள்ளுபடியை” வழங்குவதாக ரிலையன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இது தற்போது ஜியோமார்ட் பயன்பாட்டில் தற்போது அதன் பயனர்களை 50,000 க்கு மேற்பட்ட மளிகை பொருட்களை தேர்ந்தெடுக்கவும், இலவசமாக வீட்டிற்கு விநியோக முறையை வழங்குகின்றது. ஜியோமார்ட் மூலம் வாங்கும் போது எந்தவொரு குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு இல்லாமல், எக்ஸ்பிரஸ் டெலிவரி மற்றும் எவ்விதமான கேள்விகளும் இன்றி பொருட்களை திரும்ப ஒப்படைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸின் , “புதிய வர்த்தகம்” என்பது  புதிய ஆஃப்லைன் முதல் ஆன்லைன் முயற்சியாகும். இங்கே, வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜியோமார்ட் நேரடியாக இந்திய சந்தையை பொறுத்தவரை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் என இரு நிறுவனங்களை எதிர்கொள்கின்றது. படிப்படியாக, இந்த சேவை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதுடன் மேலதிக பொருட்களை ஜியோ மார்ட் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.