இந்தியாவின் 4ஜி சேவையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஃபீச்சர் ரக 4ஜி மொபைலான ஜியோபோன் வெடித்து சிதறியதாக இணையத்தில் தகவல் பரவியுள்ளது.

வெடிக்கும் ஜியோபோன்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி ஆதரவு பெற்ற ஜியோபோன் வெடித்துள்ளதாக வெளியான செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் இது தொடர்பான முதற்கட்ட ஜியோ தரப்பு அறிக்கையில் அதன் ஆரம்ப விசாரணையில், இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை என்றும் கூறியுள்ளார்.

போன்ரேடார் இணையத்தில் கிடைக்கபெற்ற படத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பயனாளரின் மொபைல் போன் என தெரியவந்துள்ளதாகவும், இந்த படத்தில் ஜியோபோன் பின்புற கவரின் மேற்பகுதி மட்டுமே உருகியுள்ளதாகவும், பேட்டரி வெடித்திருக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கருதப்படுகின்றது.

மேலும் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையாளர் ஒருவர், ஜியோபோன் உலகளாவில் கடைபிடிக்கப்படும் தர நிர்ணய விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது, மேலும், ஒவ்வொரு மொபைல் போனும் கடுமையான, தரமான கட்டுப்பாட்டு செயல்முறையின் உள்ளே செல்கிறது. இதுவொரு நாசவேலை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெயிடு வாடிக்கையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here