முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஃபோகாம் அறிமுக செய்த 4ஜி ஆதரவு பெற்ற இலவச ஃபீச்சர் ரக மொபைல் போன் அமேசான் இணையதளத்தில் ரூ.1690 விலையில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோபோன்

 

ஜியோ 4ஜி நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை குறிவைத்து டி9 கீபேட் கொண்டதாக அறிமுகம் ஃபீச்சர் ரக ஜியோ போன் முதற்கட்டமாக நடைபெற்ற முன்பதிவினை தொடர்ந்து அடுத்தகட்ட முன்பதிவு மற்றும் விற்பனை தொடங்கப்படாமல் உள்ள நிலையில் அமேசான் மற்றும் இபே ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள மொபைல் போன் ஒற்றை சிம் கார்டுடன் ஜியோ 4ஜி சிம் மடுமே பயன்படுத்தும் வகையில் பல்வேறு விதமான சிறப்பு கேஷ்பேக் சலுகையுடன் 36 மாதங்களுக்கு பிறகு ரூ.1500 கட்டணத்தை திரும்ப பெறலாம் என இந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

தற்போது, அமேசான் உட்பட ஆன்லைன் விற்பனை வலைதளங்களில் கிடைக்கின்ற ஜியோ போன் இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வமான மொபைல் இல்லை, எனவே இதனை பயனாளர்கள் வாங்குவதனை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி மொபைல் அடுத்த முன்பதிவு சில வாரங்களுக்குள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.