சமீபத்தில் விநியோகம் செய்ய தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி ஜியோ போன் வாங்குவதற்கு ரூ.1500 திரும்ப பெறும் வகையிலான வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என ஜியோ அறிவித்துள்ளது.

4ஜி ஜியோ போன்

மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நிபந்தனையை ஜியோ விதித்துள்ளதை தொடர்ந்து ஜியோ போனை முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரு.1500 பாதுகாப்பு வைப்புத் தொகை கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு நீங்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1500 வரை ஜியோ சேவைகளை பயன்படுத்த செலவு செய்ய வேண்டும். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ஜியோஃபோன் வாங்கியவர்கள் ரூ.4,500 வரை செலவு செய்ய வேண்டும்.

ஜியோ போன் திரும்பிக் கொடுக்கும் காலம்  ஜியோ போன் ஒப்படைக்கும் போது செலுத்த வேண்டிய தொகை
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 12 மாதங்கள் வரை அல்லது 1 வருடத்திற்குள்  ரூ.1,500/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் செலுத்த வேண்டும்.
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை  ரூ.1,000/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் செலுத்த வேண்டும். (ரூ.500 திரும்ப கிடைக்கும்)
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை ரூ.500/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் செலுத்த வேண்டும். (ரூ.1000 திரும்ப கிடைக்கும்)

பரவலாக ஜியோபோன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 60 லட்சம் போன்கள் அடுத்த சில வாரங்களுக்குள் விநியோகம் செய்யப்பட்ட உடன் அடுத்த முன்பதிவு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.