ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரிலையன்ஸ் ஜியோபோன்  மறுவிற்பனை விரைவில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ ஃபோன்

கடந்த ஆகஸ்ட் 24 முதல் 26 வரை நடைபெற்ற முதற்கட்ட விற்பனையில் சுமார் 60 லட்சம் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு முதற்கட்ட டெலிவரி ஏறக்குறைய நிறைவடைந்திருக்கும் சூழ்நிலையில், மறு விற்பனை விரைவில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்நிறுவனம் முன்பதிவினை தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரூ.1500 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் நிகர மதிப்பு அடிப்படையில் இலவசம் என்பது குறிப்பிடதக்கமாகும்.

ஜியோ ஃபோன் நுட்ப விபரம்

பாலிகார்பனேட் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 4ஜி ஆதரவுடன் கூடிய ஃபீச்சர் ரக ஜியோபோன் மாடல் 2.4 அங்குல திரை அமைப்புடன் டி9 கீபோர்டு கொண்டதாக 512MB ரேம் கொண்டு இயக்கப்பட்டு உள்ளீட்டு சேமிப்பு 4GB பெற்றிருப்பதுடன், இதனை அதிகரிக்க 128ஜிபி வரையிலான திறன் கொண்ட மைக்ரோ எஸ்டி ஸ்லாட் அட்டைக்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது.

2,000mAh  பேட்டரி கொண்டு கெய் ஓஎஸ் பெற்று இயக்கப்படுகின்ற இந்த ஃபீச்சர் மொபைலில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா சென்சார் மற்றும் முன்புறத்தில் வி.ஜி.ஏ கேமரா வழங்கப்பட்டு ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஆப்ஸ்களான ஜியோ டிவி, ஜியோ மூவீஸ் , ஜியோ ம்யூசிக் போன்றவை முன்னேற்பாடாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1500 வசூலிக்கப்படும் பாதுகாப்பு  கட்டணம் 36 மாதங்களுக்கு பிறகு திரும்ப அளிக்கப்படும் என ஜியோ உறுதிப்படுத்தியுள்ளது.