ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ரூ.251 மதிப்பிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் ஃபீரிடம் 251 மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கோயல் குறிப்பிட்டுள்ளார்.

ஃபீரிடம் 251 ஸ்மார்ட்போன்

ஆரம்பத்தில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போனின் நுட்ப விபரங்கள் பின் வருமாறு ;-  4 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1ஜிபி ரேம் பெற்றுள்ளது. 8ஜிபி வரையிலான இன்ட்ரனல் மெம்மரியுடன் 32 ஜிபி வரையில் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள இயலும்.

ஃபிரீடம் 251 மொபைல் போனில் 3,2 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 0.3 மெகாபிக்ஸல் ரியர் கேமராவினை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தில் செயல்படும் மொபைல்போனில் 3ஜி தொடர்பினை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

6 மாத ஜெயில்
காசியாபாத் நகரை சேர்ந்த அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் ஃப்ரீடம் 251 போன்களை விநியோகம் செய்ய கோயல் மற்றும் ரிங்கிங் பெல்ஸ் சார்பில் சிலரால் 2015 நவம்பரில் வற்புறுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு பலகட்டங்களாக ரூ.30 லட்சம் வரை வழங்கியுள்ளோம். ஆனால் அந்நிறுவனம் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்புடைய பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது’,  மேலும் மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை கேட்கும் போது கொலை செய்வதாக பலமுறை தொடர்ந்து மிரட்டியதாக அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவன தலைவர்கள் கூறியுள்ளனர்.
எனவே இந்த புகாரின் காரணமாகவே மோஹித் கோயல் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் , தற்போது விடுதலையாகியுள்ளார்.
இந்நிலையில் மார்ச்- ஏப்ரல் 2018 வரையிலான காலகட்டத்தில் மீண்டும் ஃபீரிடம் 251 டெலிவரி தொடங்கப்பட உள்ளது.