ரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா - செப்டம்பர் 30 வரை மட்டுமே

இந்திய 4ஜி தொலைத்தொடர்பு சேவையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஜியோ நிறுவனத்தின் ஜியோஃபை டாங்கில் வாங்குவதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன ? ஜியோ ஃபை என்றால் என்ன ? ஜியோ 3ஜி , 2ஜி மொபைல்களுக்கு பயன்படுத்த முடியுமா ?

ஜியோஃபை

 • ஜியோ 4ஜி சேவையை வைஃபை ஹாட்ஸ்பாட் வழியாக இல்லங்களில் இலகுவாக பெறலாம்.
 • ஜியோ 3ஜி சிம் , 2ஜி சிம் போன்ற முறைகளில் ஜியோ ஃபை வழங்க உதவுகின்றது.
 • ரூ.2000 விலையில் ஜியோஃபை கருவி விற்பனை செய்யப்படுகின்றது.
 • பிசி , லேப்டாப் போன்ற கருவிகளுடனும் இணைக்கலாம்.

ஜியோ ஃபை என்றால் என்ன ?

ரிலையன்ஸ் குழுமத்தினால் வழங்கப்படுகின்ற ஜியோ 4ஜி சேவையில் ரூ.2000 விலையில் விற்பனை செய்யப்படுகின்ற 4ஜி வகையை சார்ந்த டாங்கில் ஆகும். இந்த கருவியின் வாயிலாக கணனி , 3ஜி மற்றும் 2ஜி அலைவரிசை மொபைல்களுக்கு 4ஜி தர இணையம் மற்றும் இலவச அழைப்புகளை வழங்க உதவுகின்றது.

ரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா - செப்டம்பர் 30 வரை மட்டுமே

வைஃபை ஹாட்ஸ்பாட் கருவியாக செயல்படுகின்ற இந்த கருவியில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 31 வைஃபை இணைப்புகளும் ஒரு கணினி இனைப்பினையும் பயன்படுத்தலாம். இதில் 31 வைஃபை இணைப்புகள் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் இணைய வேகத்தை பராமரிக்க 3 முதல் 5 கருவிகள் இணைப்பது நல்ல பலன் தரும்.

ஜியோ 3ஜி சிம் கிடைக்குமா ?

ஜியோ நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை வழங்குவதற்கு எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை. உங்கள் 3ஜி மொபைலில் ஜியோ டேட்டாவை புதிய பிரைம் மெம்பர்ஷீப் வழியாக பெற ஜியோஃபை கருவி வாங்குவது சிறந்த முறையாகும். 2ஜி மொபைல்களிலும் ஜியோ4ஜி டேட்டாவினை பெறலாம்.

ரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா - செப்டம்பர் 30 வரை மட்டுமே

ஜியோஃபை பிரைம் மெம்பர் ரீசார்ஜ்

ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பு டேட்டா பலன்களை பெறும் வகையில் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் திட்டத்தில் இணைய ரூ.99 ரீசார்ஜ்செய்தால் போதும்.

ஜியோ ஃபை சிறப்பு பிளான்கள் உள்ளதா ?

ஜியோ ஃபை கருவிக்கு என தனியான பிளான் எதுவும் தற்சமயம் வரை அறிவிக்கப்படவில்லை என்பதே உண்மை. நடைமுறையில் உள்ள ரூ.19 முதல் ரூ.9999 வரை உள்ள பிளானில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா - செப்டம்பர் 30 வரை மட்டுமே

ஜியோ ஃபை இலவச கால் சேவை பெறுவது எவ்வாறு ?

ஜியோ பை டாங்கில் வாங்கிய பின்னர் உங்கள் 3ஜி அல்லது 2ஜி மொபைலை வைஃபை வாயிலாக இணைத்து ஜியோ4ஜிவாய்ஸ் (Jio4GVoice) ஆப்ஸை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு அதன் உதவியுடன் நீங்கள் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள இயலும்.

ஜியோ ஆப்ஸ்கள் பயன்படுத்தலாமா ?

ஜியோவின் அனைத்து செயலிகளையும் இலவசமாக பயன்படுத்தலாம்.

ஜியோ ஃபை நண்மைகள்
 • கையில் எடுத்து செல்ல எதுவாக அமைந்துள்ளது.
 • சிறப்பான வகையில் இணைய சேவையை பெறலாம்.
 • உங்கள் பழைய மொபைல் நெம்பரை MNP செய்ய தேவையில்லை
 • ஒரே சமயத்தில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் இணையத்தை பயன்படுத்த உதவிசெய்யும்.
 • கம்ப்யூட்டர்களிலும் ஜியோ இணையத்தைபெறலாம்.
 • வை-ஃபை இல்லாத கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பிலும் யூஎஸ்பி வயர் வாயிலாக இணையத்தை பெறலாம்.
 • வரம்பற்ற இணையத்தை பயன்படுத்த உதவி செய்கின்றது.
 • என்னுடைய பயன்பாட்டின் அடிப்படையில் 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை பேட்டரி தாக்குபிடிக்கின்றது.
ஜியோ ஃபை தீமைகள்
 • அதிக நேரம் வைஃபை இணைப்புகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்பொழுது கருவி சூடாகின்றது.
 • என்னுடைய அனுபவத்தில் 4 கருவிகளுக்கு மேல் இணைப்பினை மேற்கொண்டால் 2ஜி வேகத்தில் பயணிப்பதாக தோன்றுகின்றது.
 • இந்த கருவிக்கு என்று சிறப்பு டேட்டா பிளான்கள் இல்லை.
 • டேட்டா பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த ஜியோஃபை சிம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா - செப்டம்பர் 30 வரை மட்டுமே

கேட்ஜெட்ஸ் தமிழன் தீர்ப்பு

ரூ.2000  (ரூ.999) விலையில் மிக சிறப்பான இணைய வேகத்தை பெறுவதுடன் 2ஜி மற்றும் 3ஜி மொபைல்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதுடன் இலவச அழைப்புகள் மேற்கொள்ளவும் , உயர்தர 4ஜி சேவையை பெற உதவிகரமானதாக சராசரி 4 கருவிகளுக்கு சிறப்பான வேக்கத்தில் வைஃபை இணைப்பின் வாயிலாக 4ஜி வேகத்தை பெற உதவுகின்றது. 2ஜி மற்றும் 3ஜி மொபை மாற்ற வேண்டிய அவசியமில்லை தாரளமாக இணையத்தை எங்கேயும் பயன்படுத்தலாம். எனவே ஜியோஃபை வாங்கினால் நண்மையே..அதிகம்..

சிறப்பு பண்டிகை சலுகை

ஜியோ பை கருவிகளை வாங்கும் புதிய பயனாளர்களுக்கு ரூ.1,999 விலையில் விற்பனைக்கு செய்யப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 20ந் தேதி முதல் 30ந் தேதி செப்டம்பர் வரை இந்த சலுகையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அருகாமையில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைனில் வாங்க ஜியோ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

JioFi M2S மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்ற இந்த சலுகை கருவியை பெற்ற பின்னர் ரூ.99 ஜியோ பிரைம் ரீசார்ஜ் மற்றும் ரூ.309  ரீசார்ஜ் மேற்கொள்ளும்போது 56 நாட்களுக்கு தினசரி வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள்தோறும் 1ஜிபி உயர்வேக டேட்டா வழங்கப்படுகின்றது.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here