ஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி குறைந்த திறனில் மிக வேகமாக இயங்கும் மாடலாக விளங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் Vs சியோமி ரெட்மி கோ இரு மாடல்களை ஒப்பீட்டு முக்கிய அம்சங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
ரெட்மி கோ மொபைல் போனின் விலை ரூ.4,499 என விற்பனை செய்யப்படுகின்றது. கேலக்ஸி ஏ2 கோர் ரூ.5290 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 1 ஜிபி ரேம் பெற்றதாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் Vs சியோமி ரெட்மி கோ
இந்தியாவில் குறைந்த விலையில் மொபைல் போன் தயாரிப்பதில் சவுமீ தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. ஏ2 கோர் போனை விட ரூ.789 குறைந்த விலையில் ரெட்மி கோ கிடைக்கின்றது.
டிசைன் & டிஸ்பிளே
5 அங்குல திரையுடன் கூடிய கேலக்ஸி ஏ2 கோரினில் 540 x 960 பிக்சல் தீர்மானம் பெற்று 16:9 ஆஸ்பெகட்ட் விகிதம் கொண்டுள்ளது.
ரெட்மி கோ மொபைலில் 5 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்றுள்ள இந்த போன் மாடலில் 1280 x 720 பிக்சல்ஸ் திர்மானத்துடன் விளங்குகின்றது.
பிராசெஸர் & ரேம்
கேலக்ஸி A2 கோரில் 1.6GHz ஆக்டோ கோர் சாம்சங் எக்ஸ்னோஸ் 7870 SoC கொண்டதாகவும், 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள் சேமிப்பு பெற்றிருக்கும். கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக மெமரியை அதிகரிக்கலாம்.
குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன் 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை ஆதரிக்கும் திறன் கொண்டுள்ளது.
கேமரா
கேமரா பிரிவில் 8 மெகாபிக்சல் சென்சார் பின்புறத்திலும் , செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டிருகின்றது.
பிரைமரி சென்சாராக ரெட்மி கோ போனில் f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் இந்த போனில் கேமரா 5 மெகாபிக்சல் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெறலாம்.
பேட்டரி
ஆண்ட்ராய்டு கோ எடிசனில் செயல்படுகின்ற இரு போனுகளிலும் கேலக்ஸி ஏ2 கோர் மாடலில் 2,600mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ரெட்மியின் கோ போனில் 3000 mAh பேட்டரி கொண்டுள்ளது.
இரு மாடல்களுக்கான ஒப்பீட்டு அட்டவனை பட்டியல்
வசதிகள் | சாம்சங் கேலக்ஸி A2 கோர் | சியோமி ரெட்மி கோ |
திரை | 5-inch qHD | 5-inch HD |
பிராசெஸர் | சாம்சங் Exynos 7870 octa-core |
குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 quad-core |
ரேம் | 1GB | 1GB |
சேமிப்பு | 8GB (expandable) |
8GB (expandable) |
ரியர் கேமரா | 8 மெகாபிக்சல் | 8 மெகாபிக்சல் |
முன் கேமரா | 5 மெகாபிக்சல் | 5 மெகாபிக்சல் |
பேட்டரி | 2,600mAh | 3,000mAh |
மற்றவை | 4G LTE, Dual-SIM, Wi-Fi, Bluetooth | 4G LTE, Dual-SIM, Wi-Fi, Bluetooth |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு பை (கோ எடிஷன்) | ஆண்ட்ராய்டு ஓரியோ\
(கோ எடிஷன்) |
விலை | ரூ. 5,290 | ரூ. 4,499 (1GB/8GB) |
கேலக்ஸி ஏ2 கோர் vs ரெட்மி கோ விலை
பேட்டரி, திரையின் தீர்மானம் போன்றவற்றுடன் குறைந்த விலையை பெற்றதாக ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.4,499 விலையிலும், ஆண்ட்ராய்டு பை வெர்ஷனில் இயங்கும் கேலக்ஸி ஏ2 கோர் விலை ரூ. 5,290 ஆகும்.