டூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

தாய்லாந்து சந்தையில் சாம்சங் கேலக்ஸி J7+ டூயல் கேமரா வசதி , ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே வசதியுடன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.கேலக்ஸி நோட் 8 மாடலை தொடர்ந்து இரண்டாவது டூயல் கேமரா மொபைலாக வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போன்

தற்போது தாய்லாந்து சந்தையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள ஜே7 பிளஸ் செப்டம்பர் 18 முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. தாய்லாந்தில் ஜே7 பிளஸ் மாடல் TBH 12,900 (Rs 24,829)  விலையில் கிடைக்கின்றது.

டூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

டிசைன் & டிஸ்பிளே

யூனி மெட்டல் பாடியுடன் கூடியதாக வந்துள்ள ஜே7 பிளஸ் ஸ்மார்ட்போன் கருப்பு, கோல்டு மற்றும் பிங்க் ஆகிய நிறங்களுடன் 5.5 அங்குல முழு HD AMOLED திரையுடன் 1080 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய  2.5D கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

2.39GHz ஆக்டோ கோர் பிராசஸருடன் கூடிய மீடியாடெக் ஹீலியோ  P20 கொண்டதாக 4GB ரேம் வசதியுடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 256ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

கேமரா துறை

சாம்சங் கேலக்ஸி J7+ மொபைல் கேமரா பிரிவில் பின்புறத்தில் செங்குத்தான 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிப்சல் டூயல் கேமரா பெற்றுள்ள நிலையில் கீழ் பகுதியில் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

டூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் நாள் முழுமைக்கான 3000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பெற்ற இந்த மொபைலில் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, டூயல் ஆப் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் 4G LTE, ப்ளூடூத், மற்றும் வை-ஃபை ஆகியவற்றை பெற்றுள்ளது.

டூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விலை

தாய்லாந்து சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி ஜே7+ TBH 12,900 (Rs 24,829)  விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.இந்தியா வருகை குறித்து அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here