சாம்சங் கேலக்ஸி நோட் 8 இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் அறிமுகம்

Ads

சாம்சங் நிறுவனத்தின் இந்தாண்டின் அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8

வரவுள்ள ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு எதிராக போட்டியிடும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 மொபைலுக்கு ஆகஸ்ட் 24 முதல் அமெரிக்கா சந்தையில் முன்பதிவு தொடங்கப்படுகின்றது.

டிசைன் & டிஸ்பிளே

மிகவும் அகலமான 6.3 அங்குல QHD இன்ஃபினிட்டி டிஸ்பிளே பெற்றதாக 2960×1440  பிக்சல் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED வளைந்த கிளாசினை பெற்றதாக கிடைக்கின்ற கேலக்சி நோட் 8 மொபைலில் கருப்பு, நீலம், கிரே மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

மிகவும் சக்திவாய்ந்த 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 Soc சிப்செட் பெற்றதாக 6ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற 64GB உள்ளடங்கிய சேமிப்பு தவிர 128GB மற்றும் 256GB என மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. இதுதவிர ஆசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் Exynos 8895 சிப்செட் பெற்றதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேமரா துறை

புகைப்படம் மற்றும் காணொலிகளை பெற பின்புறத்தில் இரு கேமரா செட்டப் பிரிவுடன் ஒன்று 12 மெகாபிக்சல் f/1.7 பெற்றதாகவும், மற்றொன்று 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமராவில் f/2.4 போன்றவற்றுடன் இரு கேமராக்களும் 2X ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெறுவதற்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 8 மொபைல் கேமரா DSLR தரத்திலான படங்களை பெறவும், குறைந்த வெளிச்சத்திலும், இரவு நேரங்களிலும் சிறப்பான புகைப்படங்களை பெற உதவும் வகையில் Super Night Shot எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

மிக வேகமாக சார்ஜிங் ஏறும் வகையான ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள கேலக்ஸி நோட் 8 மொபைலில் 3,300mAh பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை பெற்றதாக வந்துள்ள புளூடூத் v5.0, USB Type-C, NFC, GPS மற்றும் Wi-Fi ஆகியவற்றுடன் பிக்ஸ்பி, தூசு மற்றும் நீர்புகா பாதுகாப்பு தன்மையை பெற்றுள்ளது.

வருகை

இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 8 அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Comments

comments