ரூ.57,900 மற்றும் ரூ.64,900 என்ற விலையில் முறையே சாம்சங் கேலக்ஸி S8, மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள் 80,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

80,000 முன்பதிவுகளை அள்ளிய சாம்சங் கேலக்ஸி S8, S8+

சாம்சங் கேலக்ஸி S8, S8+

  • தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்ற சாம்சங் கேலக்ஸி S8, S8+ மொபைல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • மே 2ந் தேதி முதல் சாம்சங் கேலக்சி எஸ் 8 டெலிவரி தொடங்குகின்றது.
  • ஒரே வாரத்துக்குள் கேலக்ஸி எஸ்8 , எஸ்8 பிளஸ் கருவிகள் 80,000 முன்பதிவினை பெற்றுள்ளது.

80,000 முன்பதிவுகளை அள்ளிய சாம்சங் கேலக்ஸி S8, S8+

உலகின் மிக சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ மொபைல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்த சில நாட்களிலே 80,000 முன்பதிவினை பெற்றுள்ளதாக சாம்சங் இந்தியாஅறிவித்துள்ளது.

இந்தியா சாம்சங் மொபைல் வணிக பிரிவு துனை தலைவர் ஆசீம் IANS செய்தி பிரிவுக்கு கூறுகையில் எங்களது ஃபிளாக் ஷிப் மாடலான கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் அபரிதமான ஆதரவை பெற்றுள்ளதால் இந்திய சந்தையில் எங்களுடைய பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

மே 2ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ள கேலக்சி S8 , கேலக்சி S8+ மொபைல்களில் பிளாக், கிரே, ப்ளூ, சில்வர், மற்றும் கோல்டு ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. இந்த நிறங்களில்கருப்பு நிறம் மட்டும் மே 12ந் தேதி முதல் டெலிவரி செய்யப்பட உள்ளது.

கேலக்சி S8 ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED , கேலக்சி  S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன் இரு மொபைல்களும் 1440×2960 பிக்சல் தீர்மானத்துடன் 531 ppi அடர்த்தியை பெற்று விளங்குகின்றது.

80,000 முன்பதிவுகளை அள்ளிய சாம்சங் கேலக்ஸி S8, S8+

இரு மாடல்களிலும் சாம்சங்  Exynos 8895 பிராசஸருடன் உடன் இணைந்து செயல்படுகின்ற 4GB ரேம் பெற்று 64GB வரையிலான இன்ட்ரன்ல் மெமரி வசதியுடன் 256 GB வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக அதிகரிக்கலாம்

2 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. மேலும் முழுமையாக வாசிக்க கேலக்ஸி எஸ்8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here