சாம்சங் நிறுவனத்தின் இந்த வருடத்தின் ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலாக விளங்கும் சாம்சங் கேலக்ஸி S8+ மாடல் ரூ.5000 வரை விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ. 65,900 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8+ மொபைல் விலை குறைந்தது

சாம்சங் கேலக்ஸி S8+

கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் மாடலின் 4ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் பெற்றுள்ள மாடல்களில் 6ஜிபி ரேம் பெற்று 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்ற மொபைல் ரூ. 74,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் ஜூலை மாதம் ரூ.4090 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.70,900 என விற்பனைக்கு கிடைத்த நிலையில் மீண்டும் ரூ. 5,000 வரை குறைக்கப்பட்டு தற்போது ரூ.65,900 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

கேலக்சி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன் இரு மொபைல்களும் 1440×2960 பிக்சல் தீர்மானத்துடன் 531 ppi அடர்த்தியை பெற்று விளங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி S8+ மொபைல் விலை குறைந்தது

சாம்சங்  Exynos 8895 பிராசஸருடன் உடன் இணைந்து செயல்படுகின்ற 4GB ரேம் பெற்று 64GB மற்றும் 128GB வரையிலான சேமிப்பு வசதியுடன், 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் உயர்தர 4K வீடியோ பதிவு செய்யும் திறன் பெற்று விளங்குகின்றது. பேட்டரி திறனில் சாம்சங் கேலக்ஸி S8+ மொபைலில் 3500mAh திறன் பெற்று விளங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி S8+ மொபைல் விலை குறைந்தது

யூஎஸ்பி டைப் சி , மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றுடன் நீர் புகா IP68 சான்று , 4G LTE (Cat. 16), வை-ஃபை 802.11ac (2.4GHz, 5GHz), ப்ளூடுத் v5.0, NFC மற்றும் GPS போன்றவை உள்ளது.