வருகின்ற ஏப்ரல் 19ந் தேதி அன்று சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S8+ என இரு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கேலக்ஸி எஸ்8

  • கடந்த மார்ச் 29ந் தேதி இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்தியாவில் ஏப்ரல் 19ந்தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
  • தென் கொரியா சந்தையில் 7,20,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

ஏப்ரல் 19ந் தேதி அறிமுகம் செய்யப்படுவதுடன் முன்பதிவு மற்றும் விலை விபரங்கள் உள்பட அனைத்து விபரங்களை சாம்சங் அன்றே வெளியிட வாய்ப்புள்ளது. தென்கொரியா , அமெரிக்கா , ஐரோப்பா நாடுகளில் ஏப்ரல் 21 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இங்குதளத்தில் செயல்படுகின்ற இரு மொபைல்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்  கேலக்சி S8 ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED , கேலக்சி  S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன் இரு மொபைல்களும் 1440×2960 பிக்சல் தீர்மானத்துடன் 531 ppi அடர்த்தியை பெற்று விளங்குகின்றது.

இரு மாடல்களிலும் சாம்சங்  Exynos பிராசஸருடன் இணைந்த உயர்ரக க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 soc உடன் இணைந்து செயல்படுகின்ற 4GB ரேம் பெற்று 64GB வரையிலான இன்ட்ரன்ல் மெமரி வசதியுடன் 256GB வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக அதிகரிக்கலாம்.

கேமரா பிரிவில் 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது

எதிர்பார்க்கப்படும் விலை விபரம்

Galaxy S8 –  $750 (Rs. 48,700)

Galaxy S8+ – $850 (Rs. 55,200)