சாம்சங் கேலக்ஸி S9 அறிமுக தேதி விபரம் வெளியானது - MWC 2018இந்த வருடத்தின் ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக சாம்சங் வெளியிட உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 மொபைல் போன் பார்சிலோனாவில் நடைபெற உள்ள 2018 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9

சாம்சங் கேலக்ஸி S9 அறிமுக தேதி விபரம் வெளியானது - MWC 2018

தற்போது விற்பனையில் கிடைத்து வரும், கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியவற்றை விட மேம்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்9 மொபைல் போன் பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியாக உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் CES 2018 கண்காட்சியில் சாம்சங் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி டி.ஜே கோ அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, இந்தாண்டின் முதல் ஃபிளாக்‌ஷீப் மாடல் மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மிக தட்டையான வடிவமைப்புடன் முழுமையான இன்ஃபினிட்டி டிஸ்பிளே உடன் பெசெல்-லெஸ் கொண்டதாக இரட்டை கேமரா பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு இயக்கப்படுவதுடன், மேலும் இந்நிறுவனத்தின் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு செயல்பட உள்ளது.

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பற்றி மேலதிக விபரங்கள் இனி, தொடர்ந்து வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here