தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் தனது நாட்டில் தானியங்கி கார் நுட்பத்தை பெற்ற கார்களை சோதனை செய்வதற்கான அனுமதியை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது.

சாம்சங் தானியங்கி கார்

  • ஹூண்டாய் நிறுவனத்தின் காரில் இதனை சோதனை செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது.
  • சோதனையின் பொழுது கட்டயாமாக இருவர் இருக்க வேண்டும் என கொரியா தெரிவித்துள்ளது.

கூகுள் , டெஸ்லா , ஊபேர் மற்றும் சமீபத்தில் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தானியங்கி கார்களை சோதனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் சாம்சங் நிறுவனம் தானியங்கி கார் தயாரிப்புக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை சோதனை செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ள நிலையில் இதற்கான அனுமதியை தென் கொரியா வழங்கியுள்ளது. இதற்கு தென்கொரியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களை பயன்படுத்திக் கொள்ள சாம்சங் முடிவெடுத்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் ஆட்டோமொபைல் துறையில் தானியங்கி கார் நுட்பத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.