இந்தியாவில் சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் QLED நுட்பத்தை பெற்ற 5 உயர் ரக தொலைக்காட்சிகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. க்யூஎல்இடி Q7 தொலைக்காட்சி ஆரம்ப விலை ரூ.3,14,990 ஆகும்.

ரூ.3 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான விலையில் சாம்சங் டிவி அறிமுகம்

சாம்சங் QLED டிவி

  • QLED தொலைக்காட்சி வரிசையில் மொத்தம் 5 தொலைக்காட்சிகள் விற்பனைக்கு வந்துள்ளது.
  • அதிகபட்சமாக  QLED டிவி விலை ரூ.24,99,900 ஆகும்.
  • உயர் ரக தொலைக்காட்சி சேவை பெற்று மகிழ்வதற்கு ஏற்ற டிவிகளாகும்.

க்யூஎல்இடி என்பது குவான்ட்ம் டாட் நுட்பத்தை (Quantum Dots technology) அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட தொலைக்காட்சிகளாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் நானோ வகையிலான பாகங்களை கொண்டு அற்புதமான வண்ணத்தில் படங்களை காணுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியை சுவர்களில் பொருத்தினால் எந்த இடைவெளியும் இல்லாமல் பொருத்தும் வகையிலான வடிவமைப்பினை பெற்றிருப்பதுடன் ஸ்டேன்ட் உள்பட மாற்று வழிகளிலும் பொருத்தலாம்.

ரூ.3 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான விலையில் சாம்சங் டிவி அறிமுகம்

இந்தியாவில் இந்த டிவிகள் Q7, Q7F, Q8, Q8C மற்றும் Q9  என 5 விதமான மாடலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அளவுகளின் விபரம் பின் வருமாறு:

  • Q9 வரிசை – 88 இன்ச் (223 cm)
  • Q8 வரிசை –  55 இன்ச் (138 cm), 65 இன்ச் (163 cm) மற்றும் 75 இன்ச் (189 cm)
  • Q7 வரிசை – 55 இன்ச் (138 cm), 65 இன்ச் (163 cm)

இந்த தொலைக்காட்சிகளில் சாம்சங் ஸ்மார்ட் வியூ ஆப் வழியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள்  வாயிலான வசதிகளை பெற உதவும்.

ரூபாய் 3,14,990 முதல் ரூபாய் 24,99,900 வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கும். முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் முதலே டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here