இந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்

இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஏற்ப , குறைந்தபட்ச விலையில் அதிகப்படியான வசதிகள் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் சியோமி மொபைல் போன்கள் , கடந்த 2017 இறுதி காலாண்டின் முடிவில் 31 சதவீத மொபைல் போன் சந்தையை பெற்றுள்ளது.

சியோமி மொபைல்

CMR நிறுவனம் வெளியிட்டுள்ள மொபைலிட்டிக்ஸ் அறிக்கையில் சியோமி நிறுவனம் மிக சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மொபைல் போன் விற்பனை நிலவரப்படி கடந்த வருடத்தின் இறுதி காலாண்டில் சுமார் 31 சதவீத பங்களிப்பினை பெற்றுள்ள சியோமி, இதன் போட்டியாளராக விளங்கும் சாம்சங் 15.3 சதவீத பங்களிப்பினை மட்டுமே பெற்றுள்ளது.  இதனை தொடர்ந்து விவோ , ஓப்போ, லெனோவா (மோட்டோரோலா) ஆகிய மொபைல் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

மேலும் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற 84 சதவீத மொபைல் போன்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ள நிறுவனங்களுடையதாக உள்ளது. மேலும் மஹாராஷ்டிரத்தில் மதிப்பினை இழந்து வரும் நிறுவனங்களில் முதலிடத்தை இந்திய மொபைல் போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்டெக்ஸ், கார்பன், சோனி மொபைல்ஸ் மற்றும் ஐபால் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்திய மொபைல் துறையில் 4ஜி வோல்ட்இ ஆதரவினை பெற்ற மொபைல்களில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 கடந்த ஆண்டில் 9.4 மில்லியன் கருவிகளை இந்தியளவில் விற்பனை செய்துள்ளது.

 

Recommended For You