உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் சாம்சங் தங்களுடைய வாடிக்கையாளர் நலன் சாரந்த விடயங்களில் மிக மோசமான செயலை செய்துள்ளதாக பாதுகாப்பு சார்ந்த ஆராய்ச்சிளார் கூவேயா தெரிவித்துள்ளார்.

உங்கள் மொபைல் சாம்சங் என்றால் ஆபத்து..! - S Suggest

எஸ் சஜ்ஸ்ட்

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஆரம்பகட்டத்தில் சாம்சங் நிறுவனம் S Suggest என்ற பெயரில் முன் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆப்ஸ்களை வழங்கி வந்தது.அதன் பிறகு 2014 ஆம் ஆண்டில் S Suggest எனும் சேவையை நீக்கி கொண்டது. ஆனால் அந்த டொமைன் பெயரை மீண்டும் புதுப்பிக்கமால் விடத்தாலே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனுபிஸ் லேப்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சார்ந்த ஆராய்ச்சிளார் கூவேயா மதர்போர்டு தளத்திற்கு அளித்துள்ள தகவலில் சாம்சங் நிறுவனம் பயன்படுத்தி வந்த S Suggest ஆப் நிறுவப்பட்ட தளத்தை 24 மணி நேரத்தில் 620 மில்லியன் முறை சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ளதாகவும், இவற்றில் 2.1 மில்லியன் கருவிகள் S Suggest தளத்தை சராசரியாக தினமும் சோதனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எஸ சஜ்ஸ்ட் இடம்பெற்றுள்ள மொபைல்களுக்கு இந்த தளத்தின் வாயிலாக மொபைல்களுக்கு ஆப்ஸ் இன்ஸ்டால் செய்வோ அல்லது மொபைலை ரீபூட் செய்வது உள்பட பல்வேறு சேவைகளை இந்த தளத்தின் மூலம் S Suggest உள்ள கருவிகளில் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருகின்றதாக குறிப்பிடுகிறார்.

இந்த இணையளத்தை சாம்சங் புதுப்பிக்க தவறியதால் இந்த தளம் யாரும் வாங்கி பயன்படுத்தும் வகையில் இருந்ததை கண்டுபிடித்த கூவேயா அந்த தளத்தை வாங்கி சோதனை செய்த நிலையில் அதில் உள்ள குறைபாட்டை கண்டறிந்துள்ளார். தற்போது இந்த தளம் பாதுகாப்பாஎ உள்ளதால் எந்த பிரச்சனையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தளம் தவறுதலாக ஹேக்கர்கள் வசம் சென்றிருந்தால் இந்த ஆப் இணைக்கப்பட்டுள்ள மொபைல் வாடிக்கையாளர்களின் நிலை என்ன ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் மொபைல் சாம்சங் என்றால் ஆபத்து..! - S Suggest

இது தொடர்பாக சாம்சங் வெளியிட்டுள்ள அதிகார்வப்பூர்வ அறிக்கையில்  இந்த டொமைன் வாயிலாக அவ்வாறு நேரடியாக எந்த தீம்பொருள் நிறுவலை மேற்கொள்ள இயலாது மேலும் பயனாளர்கள் மொபைலை கட்டுப்படுத்த இயலாது என குறிப்பிட்டுள்ளது.

மென்பொருளை நிறுவ சாத்தியமில்லை என சாம்சங் தெரிவிப்பதுபோல இருந்தாலும் போலியான மால்வேர் ஆப்களை பரிந்துரைக்க செய்ய இயலும் மேலும் வாடிக்கையாளர் தனிபட்ட தகவலை பெற முயற்சிக்கலாம்.

சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here