சாம்சங் அன் பாக்ஸ் மேஜிக் டிவி வரிசை அறிமுகம்

ஸ்மார்ட் தொலைக்காட்சி சந்தையில் கிடைக்கின்ற மாடல்களுக்கு சவாலாக 32 அங்குலம் முதல் 82 அங்குலம் வரையில், சாம்சங் அன் பாக்ஸ் மேஜிக் டிவி வரிசை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

32 அங்குல முதல் 82 அங்குல திரையுடன் மாறுபாட்ட அளவில் கிடைக்கின்ற ஸ்மார்ட் டிவி பல்வேறு சிறப்பு அமைப்புகளை கொண்டதாக கிடைக்க தொடங்குகின்றது. சாம்சங் பிளாஸா மற்றும் முன்னணி ரீடெயிலர்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றது.

சாம்சங் அன் பாக்ஸ் மேஜிக் டிவி வரிசை விபரம்

சாம்சங் நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான இந்நிறுவனம் இந்திய சந்தையில் போட்டியை எதிர்கொள்ள பல்வேறு அம்சங்களை கொண்டதாக கம்ப்யூட்டர் வசதிகளை உள்ளடக்கியதாக கிடைக்கின்றது.

சாம்சங்கின் ஸ்மார்ட் டிவியின் ‘அன் பாக்ஸ் சீரிஸ்’ மாடல்களில் லைவ் கேஸ்டிங், இரு வழி பகிர்தல், கிளவுட் சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக சாம்சங் டிவிகள் விளங்குகின்றன. மேலும் இந்த தொலைக்காட்சியில் மைக்ரோசாஃப்ட் 365 ஆஃபிஸ் கொண்டதாக உள்ளது. ஹெச்டி மற்றும் 4கே ரெசலுயூஷன் போன்ற அமைப்புகளை கொண்டுள்ளது.

சாம்சங் அன் பாக்ஸ் மேஜிக் டிவி 32 அங்குல தொலைக்காட்சி விலை ரூ.24,900 ஆகும்.