இன்றைய கூகுள் டூடுல் - எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன்எழுத்தாளர், ஆங்கில அகராதி உருவாக்கியவர், கவிஞர், ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கிய சாமுவேல் ஜான்சன் அவர்களின் 308வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன்

இன்றைய கூகுள் டூடுல் - எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன்

9 ஆண்டுகால கடுமையான உழைப்பில் ஆங்கில மொழிக்கான அகராதி-யை தனிநபராக The Dictionary of the English Language என்ற பெயரில் 1755 ஆம் ஆண்டு வெளியிட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தவர் என்ற பெருமைக்குரிய சாமுவேல் ஜான்சன் 18 செப்டம்பர் 1709 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.

இவரது முதல் ஆங்கில அகராதி 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு பல்வேறு சொற்களை அறிய மிகப்பெரிய உதவியாக இன்றைக்கும் அமைந்திருக்கின்றது. இவருடைய ஆங்கில அகராதி சாதனையை 150 ஆண்டுகளுக்கு பிறகே The Oxford English Dictionary என்ற பெயரில் வெளியாகி உலகத் தரத்தை பெற்றது.

கவிஞர், எழுத்தாளர், தார்மீகவாதி, இலக்கிய விமர்சகர், ஆசிரியர் மற்றும் மிகத்தெளிவாக ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விளக்கமளித்துள்ள இவரை ஆங்கிலத்தில் Lexicographer என குறிப்பிடப்படுகிறார்.

இவருடைய The Dictionary of the English Language அகராதியை பின்புலமாக கொண்டே இன்றைய கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here