நீல திமிங்கலம் எனப்படுகின்ற ப்ளூவேல் கேம் வாயிலாக கடுமையான மன உளைச்சலால் சிலர் தற்கொலை செய்து கொண்டதை போல சரஹா ஆப் வாயிலாக முதல் தற்கொலை முயற்சி மங்களூரில் நிகழ்ந்துள்ளது.

சரஹா ஆப்

சமூக வலைதளங்கள் இரு முனை கத்தி என்பதனை தொடர்ந்து நிரூபித்து வரும் சூழ்நிலையில் மிகவும் ஆபத்தான தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் ப்ளூவேல் எனப்படும் தற்கொலை விளையாட்டை தொடர்ந்து நேர்மை எனப் பொருள்ப்படும் சரஹா செயிலின் கோரமுகம் வெளிவந்துள்ளது.

சரஹா சிறப்பு என்ன ?

எந்தவொரு இடத்திலும் நாம் யார் என குறிப்பிடாமல் சரஹா இணைப்பை பகிர்ந்தவர்களுக்கு மற்றவர்கள் தங்கள் கருத்தை அனுப்பும் வகையிலான முறையில் செயல்படுகின்றது.

ஆக்கப்பூர்வமான கருத்துகளை பகிர்வதனால் மற்றவர்களின் வளர்ச்சி உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த செயலி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், இணையத்திற்கு கோரமுகம் என ஒன்று உள்ளதை யாராலும் மறுக்க இயலாது அல்லவா ? அதன் விளைவுதான் மங்களூரு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மங்களூரு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சரஹா செயலி இணைப்பை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவற்றில் வந்து விழுந்த ஆபாச கருத்துகளால் மனமுடைந்து அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறிப்பிட்டு பதிவு செய்த கருத்தால் மிகவும் வைரலாகி உள்ளது.

இதனை ரச்சகொண்டா போலீஸ் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சிலர் ஸ்கீரின் ஷாட் செய்து அனுப்பியதை தொடர்ந்து அதன் தாக்கத்தை உணர்ந்து கொண்ட ரச்சகொண்டா காவல்துறை ஆய்வாளர் விரைவாக நடவடிக்கையை மேற்கொண்டதன் விளைவாக அந்த பெண்ணை காப்பாற்றி கவுன்சிலிங் வழங்கி உள்ளனர்.

பெற்றோர்கள் தங்களது குழந்தை ஸ்மார்ட்போனில் புலி என பெருமைப்படுவதனை தவிர்த்து அவர்களது நடவடிக்கைகளை ஆய்வு செய்வது நலன் தரும்.