உலகின் பிரபலமான மற்றும் உயர்தர ஹெட்போன் தயாரிப்பாளரான சென்ஹெய்செர் இந்தியாவில் ரூபாய் 45 லட்சத்தில் சென்ஹெய்செர் HE 1 ஹெட்போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ரூ. 45 லட்சத்தில் சென்ஹெய்செர் HE 1 ஹெட்போன் விற்பனைக்கு அறிமுகம்

சென்ஹெய்செர் HE 1

  • ஆர்ஃபியஸ் என்ற மிக பிரமாண்டமாக வெற்றி பெற்ற ஹெட்செட் தயாரிப்பாளரின் மாடலாகும்.
  • மே 27ந் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
  • சென்ஹெய்செர் HE 1 விலை ரூபாய் 45 லட்சம் ஆகும்.

மிக சிறந்த ஆடியோ தரத்தை வெளிப்படுத்தக்கூடிய ஹெட்போன்களாக விளங்க்கூடிய இந்த ஹெட்போனில் உயர்தரமான ஆம்பளிஃபையர் உள்பட 8 காற்றில்லா டியூப்கள் பொருத்தப்பட்டு ஆடியோ அலைகளை பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது.

எவ்விதமான இரைச்சலும் இல்லாமல் மிக தெளிவான ஆடியோவை பெறும் வகையிலும் மிக குறைந்த வோல்டேஜ் அளவில் அதாவது 5 Volt மின்சாரத்திலே செயல்படும் வகையிலும் இதனுள்ள உள்ள எல்க்ட்ரோடுகள் தங்க செராமிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்ஹெய்செர் HE 1 ஹொட்போனில் 8 hertz முதல்100 kilohertz வரையிலான அலைவரிசை, 32 bits முதல் 384 kHz வகையிலான பிரிவுகளில் ஆடியோ தரத்தை விரும்பும் வகையில் மாற்றித்தரும் தன்மை கொண்டதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here