செல்போன் எண்ணுடன் ஆதார் கார்டு எண் இணைப்பு கட்டாயம் : பிப்ரவரி 28,2018வரும் பிப்ரவரி 28,2018 க்குள் ஆதார் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயமாக தவறினால் செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு இணைப்பு

ஆதார் எனப்படும் இந்தியர்களின் அடையாளம் என மாறி வருகின்ற சூழ்நிலையில் வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மொபைல் எண் உட்பட அனைத்து அரசு சார்ந்த அனைத்து நல உதவிகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த அடையாளங்களுக்கும் ஆதார் கட்டாயாமக்கப்பட்டு வருகின்றது.செல்போன் எண்ணுடன் ஆதார் கார்டு எண் இணைப்பு கட்டாயம் : பிப்ரவரி 28,2018

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்ப்படாத சிம் கார்டுகள், வரும் 28, 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டுதலின் படி சிம் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி ?

உங்களுடைய பயன்பாட்டில் உள்ள எந்த சிம் கார்டுகளையும் ஆதார் எண்னை இணைக்க அருகில் உள்ள மொபைல் ரீடெயிலர் அல்லது அதிகார்வப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவன ரீடெயிலரிடம் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

ஜியோ சிம் பயனாளர்கள், ஆதார் கொண்டு சிம் வாங்கியவர்கள் இணைக்க வேண்டிய அவசியமில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here