ஸ்கைப் அழைப்புகளை இனி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம்

ஒரு மாதத்திற்கு முன்பு மைக்ரோ சாப்ட் நிறுவனம், வெளியிட்ட பிளாக் போஸ்ட் ஒன்றில், ஸ்கைப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்து கொள்ளும் வசதி விரைவில் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளும் ஸ்கைப் அழைப்புகளை, ஐபோன், ஆண்டிராய்டு மற்றும் டெஸ்க்டாப் களில் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி விண்டோஸ் 10ல் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்றும், விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப் அழைப்புகளை இனி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம்

இந்த கால் ரெக்கார்டிங் முழுவதுமாக கிளோட்டு அடிப்படியாகவே இருக்கும். இந்த வசதி ஸ்கைப் சாப்ட்வேரின் லேட்டஸ்ட் வெர்சன்களில் கிடைக்கிறது. இதை பல்வேறு விண்டோஸ் 10 -ஐ தவிர்த்து, பெரும்பாலான பிளாட்பாரம்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை பயன்படுத்தி ரெக்கார்ட் செய்யும் ரெக்கார்டிங்கள் 30 நாட்களில் தானாகவே அழிந்துவிடும்.

டெஸ்க்டாப்களில், ஸ்கைப் அழைப்புகளை ரெகார்ட் செய்ய ‘+’ சைன்-ஐ அழுத்தினால், ஸ்கீரினின் கீழ் பகுதியில் ஸ்டார்ட் ரெக்கார்டிங் என்று வரும். இதே முறையை மொபைல்களிலும் பயன்படுத்தலாம். ரெக்கார்ட் செய்யப்பட்ட பைல்கள், MP4 பைலாக கிடைக்கும்,, இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி More-ஆப்சனில் உள்ளது.