பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை பயன்படுத்தி கொள்ள செட்டிங்க்ஸ் மெனுவில் உள்ள கம்யூனிகேஷன் ஆப்சன்களை செலக்ட் செய்து, ஸ்கைப் கணக்கை இணைத்து கொள்ள வேண்டும்.

இதுமட்டுமின்றி ஸ்கைப் ஆடியோ மற்றும் வீடியோ காலிங், போன்றவற்றை, அலெக்சா பயனாளர்கள் எளிதாக செய்து கொள்ளலாம். இந்த கால்கள் லேண்ட்லைன் மற்றும் மொபைல் நம்பராகவோ, சர்வதேச நம்பராகவோ ஸ்கைப்-லிருந்து போன் செய்யப்படும் கால்-ஆகவோ இருக்கலாம் என்று ஸ்கைப் குழு வெளியிட்டுள்ள பிளாக் போஸ்டில் குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

மேலும் அந்த போஸ்ட்டில், அலெக்சா மூலம் ஸ்கைப் காலிங் செய்யும் வசதியால் 200 ப்ரீ மினிட்களையும், ஸ்கைப் மூலம் போன்களுக்கு கால் செய்யும் வசதி 34 நாடுகளும் அதாவது அமெரிக்கா, கனடா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலெக்சாவை பயன்படுத்தி ஸ்கைப் கால்கள் செய்யும் வசதி முதலில் அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து, கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் கிடைக்கிறது. இந்த வசதிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து, மற்ற நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இது குறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலெக்சா இன்னும் ப்ளூபிரிண்ட்களில் உள்ளது. இது பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்ளவும் உதவுகிறது.

பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

இந்த வசதிகள் மூலம், அளவிட முடியாத தனிப்பட்ட திறமைகளை உருவாக்கி அதை அதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இமெயில், டெஸ்ட், வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சோசியல் மீடியா போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.