ஹுவாவே

சீனாவின் வாவே டெக்னாலாஜி நிறுவனத்தின், புதிய ஓஎஸ் ஹாங்மெங் அல்லது ஹார்மனி ஓஎஸ் முதன்முறையாக ஸ்மார்ட் டிவி மூலம் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மாற்றாக ஹாங்மெங் செயல்படாது. தொடர்ந்து கூகுள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாவே தயாரிக்க உள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள வாவே நிறுவனத்தின் உருவாக்குநர்கள் மாநாட்டில், முதன்முறையாக இந்நிறுவனத்தின் ஹாங்மெங் ஓஎஸ் கொண்ட கருவிகளை வெளியிட உள்ளது.

முதல் மாடல் 55 அங்குல திரையுடன் வெளிவரவுள்ள ஸ்மார்ட் டிவி மூலம் ஹார்மனி ஓஎஸ்  பொழுதுபோக்கு சாதனமாக இருப்பதோடு கூடுதலாக வாவே நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் சிஸ்டத்தில் மையமாகவும் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த ஓஎஸ் பெற்ற மாடல் சீன ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு கூடுதல் பலன்களை கொண்டு வரும் மேலும், பயனர்கள் பெரிய திரையில் இருந்து விலகி, தங்கள் ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்துகின்றனர். ஹார்மனி ஓஎஸ் பார்வையாளர்களை அதிகரிக்க டிவி மூலம் பொழுதுபோக்கு உட்பட பல்வேறு வசதிகளை வழங்கும் என்பதனால் மீண்டும் இவர்களை திரும்ப பெற இயலும் என நம்புகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

சமீபத்தில், ஆண்ட்ராய்டு உட்பட பல்வேறு சேவைகளை பயன்படுவத்தில் ஹுவாவே நிறுவனத்துக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து ஆண்ட்ராய்டு அடிப்படையில் தனது ஸ்மார்ட்போன் மாடல்களை வாவே வழங்க உள்ளது.