ஸ்மார்ட்போன் சந்தையில் நாள்தோறும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய அடிப்படையான 10 கோட்பாடுகளை இங்கே காணலாம்.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

ஸ்மார்ட்போன் வாங்கலாமா ?

ஒவ்வொரு முறை ஸ்மார்ட்போன் தேர்வு செய்யும்பொழுதும் அடிப்படையான பல்வேறு அம்சங்களை நாம் கவனிக்க வேண்டியது மிக கட்டாயமாகின்றது. குறிப்பாக நமது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாக மாறிப்போன் ஸ்மார்ட்போனில் எண்ணற்ற தனிப்பட்ட தகவல்கள் முதல் நம் உறவுகள் வரை பல்வற்றை ஸ்மார்ட்போன்களே கொண்டுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

1. புதுசா வாங்கலாம்

தினமும் பல்வேறு மேம்பாடுகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசை கட்டி நிற்பதனால் ஒரு வருடத்திற்கு முந்தைய மாடல்களை தேர்ந்தெடுப்பதனை தவிர்க்கலாம். இது பெரும்பாலான முன்னணி பிராண்டுகளான ஆப்பிள், சாம்சங் போன்றவைக்கு பொருந்தாதுதான் இந்த கோட்பாடு ஆனால் புதிய ஸ்மார்ட்போனில் பல்வேறு நவீன் அம்சங்களுடன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களும் அதிகரிக்கப்பட்டிருக்கும்.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

2. பாதுகாப்பு அம்சங்கள்

நவீன காலத்தில் பல்வேறு விதமான மால்வேர் மற்றும் ரான்சம்வேர்கள் தாக்குதல் பல மடங்காக உயர்ந்து வருகின்றது. எனவே புதிய பாதுகாப்பு நுட்பங்களான கைரேகை சென்சார், கண்னின் கருவிழி ஸ்கேனர் போன்ற அம்சங்கள் இருந்தால் உங்கள் தனிப்பட்ட தகவலை திருடவதனை தடுக்க முடியும்.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

3. மென்பொருள்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற இயங்குதளங்கள் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளை வழங்குவற்கான மேம்பாட்டினை தொடர்ந்து வழங்கும் இதுபோன்ற மேம்பாடுகள் பெற்ற புதிய இயங்குதளத்தை பெற்ற மொபைல்களை தேர்ந்தெடுப்பது சிறப்பானதாக அமையும்.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

4. ஹார்ட்வேர்

மொபைலின் அடிப்படையான ஹார்டுவேர் அம்சங்ளான அழைப்பு ஒலி முதல் வைப்ரேஷன், ஆடியோ,வீடியோ,  கேமரா ஆப்ஷன் மற்றும் ஃபிளாஷ் உள்பட பல்வேறு வசதிகளின் தரத்தை சோதித்து பார்த்து தேர்ந்தெடுங்கள்.

5. திருடர் பாதுகாப்பு

மொபைல் தவறிவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ ஸ்மார்ட்போனை லாக் செய்யும் வகையிலான ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் போன்றவற்றை பராமரிக்கும் வகையிலான செயல்பாட்டினை மேற்கொள்ளும் ஆப்ஷனை பெற்றிருப்பது அனைத்து மொபைலிலும் அடிப்படையாக இருக்கின்றது.

6. பேட்டரி

ஸ்மார்ட்போனில் பேட்டரி என்பது அவசியம் என்று சொன்னால் மிகையல்ல, எனவே சிறப்பான திறன்கொண்ட பேட்டரி பெற்ற மொபைல்களை தேர்ந்தெடுத்தால் நல்லது.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

7. அடிப்படை தகவல்கள்

IMEI எண், மொபைல் வாங்குவதற்கான ரசீது, வாரண்டி, சார்ஜர் போன்றவற்றை சரியாக சோதனை செய்து கொள்வது மிக அவசியாமாகும்.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

8. எங்கே வாங்குவது

சில ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. சில மொபைல்கள் ஆன்லைன் ஆஃப்லைன் என இரண்டிலுமே கிடைக்கும். எனவே வாங்க நினைக்கின்ற மொபைலின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திற்கு சென்று எங்கே கிடைக்கும் என்பதனை அறிந்து கொள்ளங்கள்.

ஸ்மார்ட்போன் வாங்குமுன் கவனிக்க வேண்டிய 10 கோட்பாடுகள்..!

9. விலை

உங்கள் பட்ஜெட்டை எதுவாக இருந்தாலும் ஸ்மார்ட்போனின் விலையை அதிகார்வப்பூர்வ இணையத்தில் பார்த்து உறுதிசெய்து கொண்ட பின்னர் உங்களின் விருப்பமான மொபைலை வாங்குங்கள்.

10. கூடுதல் பாதுகாப்பு

புதிய மொபைல்கள் வாங்கும்போது சில நிறுவனங்கள் விபத்து பாதுகாப்பு , ஸ்கீரின் பாதுகாப்பு போன்றவற்றை கூடுதல் கட்டணத்துடன் வழங்குகின்றது. அதுபோன்ற பேக்குகளை தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here